பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா * 39

மனம் தம் மிதியடிகளையல்லவா நினைத்துக் கொண்டிருக்கும். -

நான் மந்திரியானால் ... கோவில் வாசல்களில் செருப்புக்கு 'டோக்கன் கொடுப்பது போல் கல்யாண வீட்டு வாசலிலும் டோக்கன் கொடுக்கும் திட்டத்தை அமுல் நடத்துவேன். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வரதட்சணை கொடுத்துத் தளர்ந்து போயிருக்கும் பெண்ணின் தந்தைக்கு ஊக்கத் தொகையாக வழங்கச் செய்வேன்....

இப்படி நல்லநல்ல திட்டங்கள் இருப்பது தெரிந்தால் மக்கள் என்னைக் கவனிக்காமல் விடமாட்டார்கள். மந்திரியாக்காமல் விடமாட்டார்கள்... தேர்தல் எப்போது? பிப்ரவரியிலா... வரட்டும். இந்தத் தடவை நின்றுவிட வேண்டியது தான்.

உள்ளே, வெளியே (in - Out) என்று எழுதப்பட்ட பலகை இல்லாத வீடுகளில் செருப்புத்தானே அடையாளச் சின்னமாக இருக்கிறது. கேரளத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்புப் பெண்கள் பலகணவர் முறையைக் கைக்கொண்டிருந்த காலத்தில் வீட்டின் வெளியே செருப்பு இருந்தால் உள்ளே ஒரு கணவன் இருக்கிறான் என்று அடுத்த கணவன் நுழையாமல் போய்விடுவானாமே...

இந்தமாதிரி ஆளாக இருந்தால் உள்ளே நுழைகிறானோ இல்லையோ இதுதான் தருணமென்று வெளியே கிடக்கும் செருப்பை வேகமாகத் தூக்கி சென்றுவிடுவான்...

சின்ட்ரல்லா கதை மாதிரியல்லவா என் கதை இருக்கிறது. சின்ட்ரல்லா செருப்பால் ராஜகுமாரி ஆகவில்லையா? தேவதை தந்த செருப்பு யாருக்குப் பொருந்துகிறதோ அவள் என் அரசி என்று அந்த தேசத்து அரசன் சொல்ல ... சிற்றன்னைக் கொடுமைக்கு ஆளான