பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம் & 40 - அந்த அனாதைப் பெண்ணுக்கு அந்தச்செருப்பு பொருந்த... சின்ட்ரல்லாவுக்கு தேவதையின் செருப்பு பொருந்தியது மாதிரியல்லவா இந்தப் பாவிக்கு என் செருப்பு பொருந்தி யிருக்கிறது..... -

கேட்டால் "உன் செருப்பு மாதிரி உலகத்தில் ஒரே ஒரு செருப்புத்தானா? உன் அளவு ஒன்பதா? பாட்டாகம்பெனி யிடத்தில் போய்க் கேள்... ஒன்பதில் இந்த வருடத்தில் எத்தனை செருப்புத் தயாரித்தீர்கள் என்று....' என்று ஏதாவது பதில் சொல்லி விடுவான்....

இதற்குத்தான் ஒவ்வொரு செருப்பும் இன்னொன்றைப் போல் இல்லாமல் தயாரிக்க வேண்டும் என்பது ... நான் மந்திரியானால், இதற்கும் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்.

இதோ எழும்பூர் வந்துவிட்டது.

எவ்வளவு லாகவமாக என் செருப்பை மாட்டிக் கொண்டு இறங்குகிறான்... நானும் பின் தொடர்கிறேன். கையில் இந்து பேப்பர், ஃப்ரீப்கேஸ் சகிதம் டிக்கட்டைக் கொடுத்துவிட்டு வெளியேறுகிறான் பரவாயில்லை... டிக்கட் எடுத்திருக்கிறான்.

நானும் வெளியே வருகிறேன். அவன் நடக்கும்போது என் செருப்பை ஏக்கத்தோடு பார்க்கிறேன். வெயில் கொளுத்துகிறது. இந்த வெயிலில் என் செருப்பு என்ன பாடுபடுமோ... r

17D வருகிறது. அவன் வேகமாக ஒடிப்போய் ஏறுகிறான்.

ஃபுட்போர்டில் கடைசியாக பிரியப் போகும் என் செருப்பைப் பார்க்கிறேன்.