பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிழைகள் தரும் பேரின்பம்

ஐரிஸ் எழுத்தாளர் ராபர்ட் லிண்ட் எனக்குப் பிடித்த நல்ல எழுத்தாளர். (கவிஞர் நா. காமராசன் நடையில் சொல்வதென்றால் 'என் செல்ல எழுத்தாளர்) சின்ன விஷயங்களைக் கூட அதி அற்புதமாகவும் நகைச் சுவையுணர்வோடும் எழுதுவதில் வல்லவர்.

இலக்கிய சாம்ராட்கள் சிலர் தங்கள் கதை கவிதைகளில் செய்துள்ள வேடிக்கையான பிழைகளைச் சுட்டிக் காட்டி ஆங்கிலத்தில் மிக நளினமாய் ஒரு கட்டுரை எழுதியுள்ளார் லிண்ட்.

சேக்ஸ்பியருக்கு பூகோள ஞானமோ வரலாற்றறிவோ பூஜ்யமாம்; காலகட்டம் பற்றிய அவர் கணிப்புகள் எல்லாம் மிகமட்டமாம். சார்லஸ் லாம், ஹாஸ்லிட், ஸ்காட் போன்றவர்களின் எழுத்துக்களில் எவ்வளவோ பிழைகளாம். ஸ்காட் தம் நாவல் ஒன்றில் சூரியனை அதி காலையில் தவறான திசையில் உதிக்கச் செய்துள்ளாராம்!