பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம்* 44

ஜான்சன் தம் அகராதியில் சில வார்த்தைகளுக்கு வேண்டுமென்றே தப்பான பொருள் தந்துள்ளாராம்.

ஒத்தெல்லோ காலத்தில் வெனிஸ் நகரத்தில் மூர்இனத்தவன் எவனும் இருந்ததில்லை என்று ஒரு புதிய செய்தியை ஒரு சாதாரண ஆராய்ச்சியாளன் கண்டு பிடித்து விட்டால் போதும்... ஒத்தெல்லோவை மூர்இனத்தவ னாகக் காட்டும் சேக்ஸ்பியரின் சரித்திர ஞானத்தைச் சந்தி சிரிக்க வைத்துவிடலாம் என்று அவன் பூரித்துப் போவானாம். டைம்' பத்திரிகையில் சேக்ஸ்பியரை ஒரு பிடி பிடித்துவிடலாம் என்று நினைப்பானாம்... அந்த நாடக மேதையைக் காட்டிலும் ஒர் அங்குலம் உயர்ந்து விட்டதாய்ப் பெருமைப்படுவானாம். -

இப்படிப் பிரபல எழுத்தாளர்கள் செய்த செய்கிற பிழைகளை அறியும் போதெல்லாம் வாசகர்கள் ஒரு புது உற்சாகம் - உவகை அடைகிறார்களாம் ஆண்டுதோறும் அரசாங்கம் போடும் வரிகள் கொஞ்சநஞ்சமா? அவற்றிற்கு ஆளாகி வருந்தும் மக்களுக்கு எழுத்தாளர்களின் பிழை மணங்கமழும் வரிகள் - வாசகங்கள்தாம் ஆறுதல் அளிக்கின்றனவாம். நகைச்சுவை உணர்வு குறைந்து வரும் இக்காலத்தில் வாய்விட்டுச் சிரிக்க வேண்டுமானால் எழுத்தில், பேச்சில், பிழைகள் பெருக வேண்டுமாம். மாபெரும் பிழைகளைப் புகழொடு தோன்றச் செய்யும் எழுத்தாளர்கள் மக்களால் கெளரவிக்கப்பட வேண்டு ÍÍ)fTłD.

பிழைகளைப் போற்றி வரவேற்று லிண்ட் எழுதியுள்ள கட்டுரையின் ஆங்கிலத்தலைப்பு: In praise of Mistakes. எழுத்தாளன் எவ்வளவு அரும்பாடுபட்டு ஒரு காவியமோ