பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 45

கதையோ நாடகமோ படைத்தாலும் அவனுக்கு ஏற்படும் இன்பம் சிற்றின்பமே. அதேநேரத்தில் அவன் படைப்பில் ஒரே ஒரு பிழையைக் கண்டு பிடித்துவிட்டாலும் வாசகனுக்குக் கிடைக்கும் இன்பம் நிச்சயம் பேரின்பம் தான். அதனால் தான் லிண்ட் கட்டுரைத் தலைப்பைப் 'பிழைகள் தரும் பேரின்பம்' என்று தமிழாக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. (சமயச் சான்றோர்களிடமிருந்து பேரின்பத்தைத் தட்டிப் பறிக்கும் இந்தப் பாவிக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ!) -

ஒட்டக்கூத்தனின் தனிப்பாடல் ஒன்று. அந்தநாள் பூம்புகார்க் குடிகாரர்களின் கீர்த்தி குறித்த பாடல் அது. எவ்வளவுதான் குடித்திருந்தாலும் அவர்கள் புத்தி பேதலிக்கமாட்டார்களாம்; எதைக் கேட்டாலும், தெளி வாகச் சொல்வார்களாம். ஆனானப் பட்ட மகாபாரதக் கதையைக்கூட அச்சுப் பிசகாமல் சொல்வார்களாம். ஒருவன் 'மகாபாரதக் கதையைச் சொல்லவா’ என்று கேட்கிறான். 'சரி சொல்' என்றால் உள்ளபடி சொல்லவா என்று கேட்கிறான். அரைப்படி ஒருபடி என்று 'உள்ளே ஊற்றியிருக்கும் அவன் ஆசையைக் கெடுப்பானேன் என்று 'உள்ளபடி சொல் என்றால் 'வாலி துரோபதையை மூக்கரிந்தது அல்லவா மகாபாரதம்' என்று முடிக்கிறான்.

இராமாயண மகாபாரதங்களுக்கிடையே என்னமாய்க் காப்பிய ஒருமைப்பாட்டை (Epic Integration) உண்டாக்க முயல்கிறான். -

'திருவாளன் உள்ளபடி 'யின் உளறலில் துள்ளி விளையாடும் பிழைகளைத் தமிழர்கள் எவ்வளவு காலமாய் அனுபவித்திருக்கிறார்கள். 'சீதைக்கு ராமன் சித்தப்பா என்று எவன் என்றைக்குச் சொன்னான் என்று தெரியவில்லை. யார் யாரெல்லாம் அதை நேரடியாகக் கேட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள் என்றும்