பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம்* 16

தெரியவில்லை. சந்தேகமில்லாமல் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்

அப்படிப் பார்த்தால் ஆசிரியப் பெருமக்களும் கொடுத்து வைத்தவர்கள்தாம்! - குடும்பம் பிள்ளை குட்டி என்று அவர்களுக்கு ஆயிரம் கவலைகள் இருக்கலாம்; அவையெல்லாம் மாணவச் செல்வங்களின் விடைத் தாள்களைத் திருத்தத் தொடங்கினால், பஞ்சாய்ப்பறந்து ஓடிவிடும்.

டாக்டர் ஜி.யு. போப் வெளிநாட்டிலிருந்து வந்து தமிழுக்குத் தொண்டு செய்தவர். மரியாதை காரணமாக அவரை யாரோ போப் ஐயர் என்று அழைத்ததை நினைத்து நினைத்து நெஞ்சம் உருகிய வேகத்திலோ என்னவோ ஐரோப்பாவிலிருந்து தமிழகம் வந்த டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்...' என்று எழுதுவார் ஒரு மாணவர். வட்ட அகராதி ஏதும் இருக்குமோ, என்னவோ, வீரமாமுனிவரின் சதுரகராதியை சதுர அகராதி என்று குறிப்பிடுவார் இன்னொருவர். நெடுஞ்செழியன் வீரத்துக்கு இது குறைந்தது என்று நினைத்தோ என்னவோ 'ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்று எழுத வேண்டிய இடங்களில் எல்லாம் ஆசியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று மறக்காமல் எழுதுவார் மற்றொ ருவர். இவர்களிடம் நெடுநல்வாடை, நெடுநாள்வாடை, நெடுநெல்வடை, நெடுநாள் வடை என்றெல்லாம் புதுப்புதுக்கோலம் பூண்டு நிற்கும்; குகப்படலம், குகைப் படலமாகும். மேருமலை மோருமலையாக மாறும் ... சங்கத்தோடு சம்பந்தப்பட்ட கபாடபுரம், தாராபுரம் ஆகும். முடத்திருமாறன் மூடத்திருமாறன் ஆவான்.

திண்ணையில் தனியாக உட்கார்ந்து ஆசிரியர் தேர்வுத் தாள்களைத் திருத்துவாரேயானால் மாணவமணிகளின் கைவண்ணத்தில் மனம் பறிகொடுத்துப் பட்டாசுச் சிரிப்புச்