பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம்* 18

கோவலன்கால்போன கதையோடு தொடர்புடைய என் அனுபவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. என் பையன் சுடர் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது சிலேட்டில் நெண்டி என்று எழுதியிருந்தான். பொறுப்புள்ள அப்பா என்று என் மனைவி என்னை மெச்ச வேண்டும் என்று பையனைப் பக்கத்தில் அமர்த்தி நெண்டி அல்ல ..... நொண்டி என்று எழுதவேண்டும். காலைக் காணோமே!” என்று கேட்டேன். உடனே அவன், 'நொண்டிக்கு எப்படி அப்பா கால் இருக்கும்", என்று கேட்டான். ஒரு நிமிடம் நான் ஆச்சரியப்பட்டுப்போனேன். இந்தச் சின்ன வயதில் இவ்வளவு ஞானமா!' என்று அவனை உச்சிமோந்து முத்தமிட்டேன். பையன் அப்பனுக்கு உபதேசம் செய்த அந்தச் சாமிநாதனாகக் காட்சியளித்தான்.

என் இன்னொரு அனுபவம் ... இளமைக் கால அனுபவம். எட்டாம் வகுப்புப் படிக்கும்போது நடந்த சம்பவம். நாடகம் ஒன்றுக்குக் கதை வசனம் ப்ாடல்கள் எழுதி ஒரு சிறு பாத்திரத்தில் நடித்து இயக்கவும் செய்தேன். (டி.ராஜேந்தர் மாதிரி எல்லாமே நான்தான்... தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் என்னைப் பயன்படுத்திக் கொள்வார்களாக.) நாடகத்தின் பெயர் தலையாலங் கானம். பாண்டியன் நெடுஞ்செழியனாகப் பன்னிரண்டு வயதுள்ள என் நண்பன் ஒருவன் நன்றாக நடித்தான். போருக்குப் புறப்படும் காட்சி. தாயிடம் வீர வசனம் பேசி விடை பெற வேண்டும் பாண்டியன். ஒத்திகையில் அந்த இளஞ்சிங்கம் "பகைவர்களின் தலைகளைப் பந்தாடி விடுவேன். குடலை உருவி மாலையாகச் சூடி வருவேன். குருதியில் குளித்து வெற்றி கீதம் பாடி வருவேன். வடை கொடு, தாயே" என்று முழங்கினான். சக மாணவ நடிகர்கள் எல்லாம் விடை கொடு தாயே" என்பதற்குப் பதிலாக வடை கொடுதாயே என்று பேசியதைக் கேட்டுக்