பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்வுக்கு வந்த வாழ்வு

தமிழ்நாட்டில் இப்போது ஒரு ஸ்லோ சைக்கிள் ரேஸ் நடக்கிறது, மிக வேகமாக.

பிற்பட்டோர் அல்லது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெறத் தான் இந்த ரேஸ்.

சாதிச்சங்கங்கள் எல்லாம் சுறுசுறுப்பாக இயங்குகின்றன அம்பா(ளின்) - சங்கரரின் அருட்பரிசு கிட்டாதா என்று!

வறுமையினாலும் மடமையினாலும் தாமாகக் கீழ்நிலை அடைந்தவர்களுக்காக தாழ்வுற்றவர்களுக்காக அனுதாபப் படுகிறோம். மற்றவர்களால் காலங்காலமாய் அடிமைப்படுத்தப்பட்டுத் தாழ்த்தப்பட்டவர்களுக்காக - அல்லது பிற்படுத்தப்பட்டவர்களுக்காக - ஆத்திரப்படு கிறோம். இன்றோசமூகத்தின் பல பிரிவினரும் எங்களைப் பிற்படுத்தப்பட்டோராக்கு - தாழ்த்தப்பட்டோராக்கு',