பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 53

என்று கோரிக்கைகள் எழுப்புவதைப் பார்க்கும்போது அதிசயப்படுகிறோம்...

தாழ்வுறுதலுக்கு இப்படியும் ஒரு போட்டியா ..... 2 தாழ்வுக்கு இப்படியும் ஒரு வாழ்வா...? இன்னமும் இங்கே சாக்கடை அள்ளுபவர்கள், மலம் அள்ளுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த அருவருப்பான தொழில் முற்றாக ஒழிந்து விடவில்லை. பரம்பரை பரம்பரையாக அந்தத் தொழிலைச் செய்வோ ருக்கு அதிலிருந்து பூரண விடுதலை இல்லை. எங்களுக்கு அந்தத் தொழிலைச் செய்ய ஆசையாயிருக்கிறது என்று வேறுயாரும் சொல்வதில்லை. முன் வருவதில்லை. சட்டம் அவர்களுக்குக் கொஞ்சம் சலுகைகள் கொடுத்தால் மட்டும் நமக்கும் அந்தச்சலுகைகளைக் கொடுக்கக்கூடாதா என்று ஏங்குகிறோம்... எதிர்பார்க்கிறோம்.

யானைப் பசிக்குப் பொரி உருண்டை மாதிரி வழி வழியாய் வந்த சமுதாய அநீதியை அகற்றக் கருதி நலிந்த பிரிவினருக்கு அரசு சில சலுகைகளை அளித்திருக்கிறது. பள்ளங்களை மண் இட்டு நிரப்பி உயர்த்த முயல்கிறது.

அரசு ஒன்று நினைக்க மக்கள் ஒன்று நினைக்கிறார்கள். 'எல்லா இடத்தையும் பள்ளமாக்குங்கள் என்கிறார்கள்... பள்ளத்தில் விழ நான் முந்தி நீ முந்தி என்று பலத்த போட்டி போடுகிறார்கள்! .

முன்பெல்லாம் தங்கள் சாதிதான் உயர்வானது, மாற்றுக் குறையாதது என்று பெருமை பேசுவார்கள்; தாழ்ந்த சாதிக்காரர்கள் என்று மற்றவர்களால் மதிக்கப்படுபவர் களும் தங்கள் சாதியை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மற்ற சாதிகளைக் காட்டிலும் தங்கள் சாதி மேலானது என்று நம்புவார்கள். . .