பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம்* 54

கலம்பகப் பாட்டு ஒன்று இதனை காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதனைச் சுவையாகச் சித்தரிக்கிறது.

முருகனின் திருத்தலம் வெங்கையை ஆளும் வேடர் குலத்தலைவரின் மகள் ஒருத்தியை வேட்டையாட வந்த பாண்டியகுல இளவரசன் பார்க்கிறான். நெஞ்சம் பறி கொடுக்கிறான். அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறான். ஊருக்கு வந்தவுடன் வேடர் குலத் தலைவனிடம் பெண் கேட்பதற்காக அமைச்சரைச் சீர்வரிசைகளுடன் அனுப்பி வைக்கிறான். தாழ்ந்த குலம் தானே, தராமலா போகப்போகிறான் என்ற தைரியத்துடன் அமைச்சர் வேடனைச் சந்திக்கிறார். 'பாண்டியன் வம்சம் சூரிய வம்சம்! சந்திரவம்சம்! வேடர் குலத்தைவிட எவ்வளவு உயர்ந்த வம்சம் அந்த வம்சத்தில் சம்பந்தம் செய்வதென்றால் வேடர் குலத்தலைவர் கொடுத்து வைத்திருக்கவேண்டும்' என்று கூறி அவனுக்கு அடித்திருக்கும் யோகத்தைப் பாராட்டிவிட்டு மண ஒலையை நீட்டுகிறார்.

உடனே வேடர் குலத்தலைவனின் கண்கள் சிவக்கின்றன. "ஒய் அமைச்சரே! எவ்வளவு துணிச்சல் இருந்தால் போயும் போயும் அரச வம்சத்தில் வந்த ஒருவனுக்குப் பெண்கேட்க வந்திருப்பீர்! சூரிய வம்சமாம்... சந்திர வம்சமாம்... என்னய்யா கதைக்கிறீர். தெரியாதா இவர்களுடைய யோக்கியதை? அரிச்சந்திரன் என்னய்யா செய்தான். வக்கில்லாமல் மனைவியை விற்றான். நளன் தமயந்தியைக் காரிருளில் கானகத்தில் கைவிட்டு ஓடினான். அப்பேர்ப்பட்ட இராமன் சீதையை அசோகவனச் சிறைக்கு அனுப்பிவைத்து விட்டு காட்டில் திரிந்து கொண்டிருந்தான். பாண்டவர்கள் தங்கள் நாயகி பாஞ்சாலியைத் துகில் உரிய விட்டுப் பார்த்துக்