பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 55

கொண்டிருந்தார்கள்... இவ்வளவுக்குப் பிறகும் பெண் வேண்டும் என்று கேட்க அரசகுலத்தில் பிறந்த ஒருவனுக்கு யோக்கியதை இருக்கிறதா? எச்சரிக்கை, நீ இனிமேல் யாரிடமும் அரச குலத்தவனுக்குப் பெண் கேட்காதே. நாங்கள் யார் என்று நினைத்தாய்...வேடர்கள் ... திருவெங்கை வேடர்கள். எங்கள் கண்ணப்பனின் எச்சிலை யெல்லாம் நைவேத்தியம் என்று இன்பமாய்ச் சுவைத்தான் என்பதற்காகப் போனால் போகிறது என்று அந்தப் பரமசிவன் பெற்றெடுத்த குமரனுக்கு மட்டும் ஒரு பெண்ணைக் கொடுத்தோம். அதுவும் பெற்ற பெண்ணை அல்ல; வளர்த்த பெண்ணை' என்கிறான். அரசகுலம் வேடர் குலத்தைவிட எந்த எந்த வகையில் மேலானது என்று கேட்டு அரசு சலுகையை சம்பந்தத்தை ஏற்க மறுக்கிறான்; வீரம் பேசுகிறான்! *

இதே போல் ஒரு சம்பவம் ... என் கல்லூரி வாழ்வில் கண்டது. பிற்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர் ஒருவர் சம்பளச் சலுகைபெறக் கல்லூரியில் விண்ணப்பம் கொடுத்திருந்தார். கையெழுத்துப் போட்டது தவிர அந்த மாணவரின் தந்தைக்கு வேறு எதுவும் தெரியாது. வருடக் கடைசியில் 'ஸ்காலர்ஷிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அவருக்குக் கடிதம் போனது. அவர் வந்தார். அவர் மகனின் வகுப்பு நண்பர்களாகிய எங்களிடம் விவரம் கேட்டார். "நீங்கள் பிற்பட்ட வகுப்பு, அதனால் அரசாங்கம் நீங்கள் கட்டிய சம்பளப் பணத்தைத் திருப்பித் தந்திருக்கிறது' என்று சொன்ன அடுத்த வினாடியில் அவருக்கு வந்த கோபத்தைப் பார்க்க வேண்டுமே... நெற்றிக் கண் இருந்திருந்தால் நிச்சயம் திறந்திருப்பார்... "நான் என்ன சின்னச் சாதியா? எங்கள் பரம்பரை எப்பேர்ப்பட்டது தெரியுமா: ' என்று பெருமைப்புராணம் பாட ஆரம்பித்து விட்டார். அவரைச்