பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு தாவலில் காயம் செய்யும் ஒரு சொல்; ஒரு தடவலில் அதை ஆற்றும் மாயம் செய்யும் ஒருசொல்;

கல்லைப்பிசைந்து கனிச்சாறு பிழிந்துவிடும் சொல்; நுரைக்குமிழை முரடாக்கி வைரமாக்கும் இன்னொரு சொல்!

நேற்றின் வானத்தைக் கிழித்து ஜெட் எனப் பின்னோக்கிப் பாயும் ஒருசொல்; நாளையின் திசையை உரித்து ஏவுகணையாய் முன்பாயும் மற்றொன்று என்னவிந்தை!

இனிப்பென்றால் வாயில்தேன் ஊறுகிறது.

நெருப்பென்றால் நாக்கு கொப்பளித்துவிடுகிறது. கடவுளே உலகத்தை வார்த்தையால்தான் படைத்தானாமே?

எந்த மொழியில்? கடவுள் ஒரு கவிஞனா? அப்படியென்றால் சரிதான்!

பாரதி வரமாய்க்கேட்ட மந்திரச் சொற்கள், அவன் பேரப்பிள்ளைகளுக்குத் தாயமாக வாய்த்திருக்கின்றன.

இரத்தம் கக்கி மயங்கிக் கிடப்பவனைப் போர்வைக்குள் புதைத்து இவர்கள் “வா, இந்தப்பக்கம்” என்று குரல் கொடுக்கிறார்கள். உடனே அந்த அரைப்பிணம் “வந்தேன்” என்கிறது.

கேட்டால், பதில் சொல்கிறது!

எல்லாம் நெஞ்சுக் கூட்டில் இருக்கும் ‘தாயத்தின்’ மகிமையால்தான்.

இந்த மீராவைப் பாருங்கள்.

சொற்களை வைத்துக்கொண்டு என்னென்ன வித்தைகள் ரிகிறார் நாம் அழைக்கும்போது நழுவி ஓடிப்போய் நம்

4