பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 61

"ஒருவேளை தங்களோடு மகாத்மாவின் கொள்கை களையும் கொலுவில் வைத்துவிட்ட கொடுமையை நினைத்துக் கோபத்தில் வெளி நடப்புச் செய்து விட்டனவோ...

இருக்கலாம்... மகாத்மாவின் கொள்கைகளைப் பற்றி இப்போதெல்லாம் யார்அதிகம் க்வலைப்படுகிறார்கள்...?

பெண்ணைத் தொடும்போது கூடக் காகிதத்தைத் தொடும் உணர்வே இருக்கவேண்டும் என்றார் அவர். இன்றோ ஜெயராஜ் படம் உள்ள காகிதத்தைத் தொடும் போதுகூட பெண்ணைத் தொடுவதாகவல்லவா மயங்கு கிறார்கள் நம்மவர்கள்!

சே. குரங்கை விட்டுவிட்டு எங்கோ தாவுகிறேனே...

மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்பது டார்வின் சித்தாந்தம்... இதை அறிவியல் மேதைகள் ஒப்புக் கொள்ளலாம். ஆனால் குரங்குகள் ஒப்புக்கொள்ளுமா என்பது சந்தேகம்.

குரங்குகள் மாநாடு போட்டால் டார்வின் கோட்பாடு தவிடு பொடியாகலாம். 'எந்தக் குரங்கும் வரதட்சணை கொடுக்கவில்லை என்று மனைவியை அக்கினிப் பிரவேசம் செய்ய வைப்பதில்லை எந்தக் குரங்கும் சீட்டாடுவதில்லை; எந்த குரங்கும் மத்தியானம் ஒரு மணி வெயிலில் சினிமா பார்க்கத் தவிப்பதில்லை. எந்தக் குரங்கும் கலப்படம் செய்வதில்லை. கரன்ஸி நோட்டுகளை சேர்த்துவைத்து எண்ணி மகிழ்வதில்லை. எந்தக் குரங்கும் மதவெறியையோ இனவெறியையோ தூண்டுவதில்லை. ஆகவே மனிதன் நம்மிலிருந்து உண்டாகவில்லை. டார்வின் சொன்னது தவறு என்று கண்டனத் தீர்மானம் போட்டாலும் போடலாம்.