பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா இந்தப் பக்கம் & 64

போடுகின்றன. முன்பெல்லாம் எறும்பு கடித்தது, அணில் கடித்தது என்று சொல்லும் வேலைக்காரச் சிறுமி ராஜம் இப்போது குரங்கு கடித்தது என்று கையில் வைத்திருக்கும் காயைக் காட்டுகிறாள். இதே போல் ஒவ்வொரு வீட்டுக் கொல்லையிலும் தேங்காய், பப்பாளி, தக்காளி என்று ஏதாவது விருந்து கிடைக்கிறது. இப்படி எப்போதும் சத்துணவு கிடைத்துவிடுவதால் இந்தக் குரங்குகள் அரச மரத்துப் பக்கத்தில் உள்ள சத்துணவு மையத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

வரவர குரங்குகளின் வாலாட்டம் அதிகமாகி விட்டது.

உள்ளூரில் ஒரு கூட்டத்தில் பேசியதற்காக ஒரு ரோஜாப்பூ மாலை கிடைத்தது. மேடையில் ஒன்றிரண்டு பூவைச் சுவைத்த நேர்த்தியைப் பார்த்தோ என்னவோ செயலாளர் மாலையை வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்தார். நானும் அவருக்கு முன்னாலேயே நாகரிகமாக மாலையைப் பாரதி படத்துக்கு மாட்டி வைத்தேன். மறுநாள் காலையில் காய்ந்த மாலை குரங்கின் கையில் இருந்தது. இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். .

குழாயைப் போட்டுத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்ததும் மூன்றும் எங்கிருந்து தான் வருமோ, ஜலக்கிரீடை செய்துவிட்டு ஓடிவிடும். துவைத்த சேலையைக் கம்பியில் காயப்போட்டால் போதும், துச்சாதனன் மாதிரி வந்து நிற்கும். அடுத்த வீட்டுச் சோற்றுப்பானை, பக்கத்து வீட்டுப் பால் செம்பு இப்படிப் பல பொருட்கள் என் வீட்டு மாடியில் குலுக்கலில் விழாத லாட்டரிச் சீட்டுகளாய்ச் சிதறிக்கிடக்கும். இந்தக் குரங்குகளின் அட்டகாசத்தை யாரும் அடக்குவதாகத் தெரியவில்லையே என்று பக்கத்து வீட்டு மாமி, ஒரு