பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதுகந் தண்டுக்குள் பதுங்கிக் கொள்ளும் சொற்கள் இவரிடம் மட்டும் வாலை மடக்கிக் கால்களுக்கிடையே வைத்துக்கொண்டு, என்னமாய்ச் சொன்னபடி கேட்கின்றன!

இவர் காட்டும் வித்தை வாய்ச்சாலம் அடித்து வயிற்றைக் கழுவிக்கொள்ள அல்ல. கீரி-பாம்புச் சண்டை தேர்தல் வாக்குறுதியாய் நிற்க, கடைசியில் பற்பொடி விற்றுவிட்டு அடுத்த சந்தை தேடும் வியாபாரத்துக்கல்ல. கண்கட்டுவித்தையில்லை. கண்திறக்கும் வித்தை. இது இவர் எழுத்துக்களுக்கே தெரியும் போலிருக்கிறது. அதனால்தான் இத்துணை பயபக்தி!

புதுத்தமிழின் இலக்கிய வரலாற்றில்

மீராவின் பாட்டுக்கு ஒரு தனியிடம் உள்ளது போல், மீராவின் வசனத்துக்கும் ஒரு தனியிடம் உண்டு.

தமிழ் உரைநடைக்குக் கூட இத்துணை இதம் (Rhythm) உண்டா என வியக்கவைக்கும் நடை அவருடையது.

அவர் ரசித்த ராபர்ட் லிண்ட், நான் ரசிக்கும் ஆஸ்கார் வைல்ட், ஷா, இவர்களின் ஆங்கிலம் போல், பஷீரின் மலையாளம் போல், கிஷன் சந்தரின் உர்தூ போல் குறும்பும் இளமையும் துள்ளும் ஆழமான தமிழ் மீராவுடையது. அவர் நடையில் தன்னம்பிக்கையின் நிமிர்வும் மிடுக்கும் உண்டு. ஆனால் ஆடம்பர ஆரவாரமோ ஆணவச் செருக்கோ இருப்பதில்லை. அலங்கார அணிகள் இல்லை. தாலி, இறுக்கமான உள்ளாடை இவற்றையும்கூட உதறிவிட்ட புதுமைப் பெண்போல் நடக்கும் பெருமித நடை அது. பாமரரின் மொழி (Slang)யை, “சட்டைக் கையைச் சுருட்டி ஏற்றிக்கொண்டு, உள்ளங் கைகளில்

5