பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 9

இந்த மனிதப் பிண்டங்களை வைத்து நடத்தும் நர வியாபாரத்தை அறிவியல் சோதனையின் பெயரில் மேலைநாடுகளில் நடைபெறும் அப்பட்டமான சுரண்டல்களை திருமதி தாரா அலி பெய்க் அம்பலப் படுத்தியுள்ளார், அந்தக் கட்டுரையில்.

பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் கருத்தின் அடிப்படையில் இப்போதெல்லாம் கருப்பாதை சாத்துவதையோ, கருவைக் கலைப்பதையோ குற்றமாகக் கருதாமல் அனுமதிக் கிறோம். ஆனால் கருப்பொருள் கடைப்பொருள் ஆவதையோ, பிண்டம் பேரம் பேசும்

பண்டம் ஆவதையோ எப்படி அனுமதிக்க முடியும்?

ஏற்கமுடியும்?

அனுமதிக்க முடியாத இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த ஓர் அனைத்துலக சங்கமே உருவாகியிருக்கிறது; மிக நீண்ட பெயருள்ள இச்சங்கம் பாரிசில் நடந்த ஒரு கருத்தரங்கில் பல திடுக்கிடும் செய்திகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது; கருச்சிதைவை வியாபார மயமாக்கும் கயமைக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது.

சென்ற ஆண்டில் நடந்த சம்பவம்.... ஸ்விஸ் - பிரான்ஸ் எல்லையில் சுங்க அதிகாரிகள் ஒரு சிலர் சோதனையிடு வதற்காக ஒரு லாரியைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். உள்ளே பார்த்தால் லாரி நிறைய மனிதப்பிண்டங்கள். நம் ஊரில் அரிசி கடத்துவதுப்ோல் பிண்டங்களைக் கடத்தியிருக்கிறார்கள் லாரியில். அவை எதற்காகக் கடத்தப்பட்டன என்று விசாரித்தபோது, அழகு சாதனம்' தயாரிக்கும் ஒரு பிரெஞ்சு நிறுவனத்திற்காக என்ற உண்மை வெளிவந்தது. பிண்டங்களின் தோல் மிகமிக மென்மையாய் இருக்கும் என்பதால் அவற்றைப்