பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரில் என்ன இருக்கிறது?

பெயரில் என்ன இருக்கிறது?ரோஜாவை என்ன பெயர் சொல்லி அழைத்தால் என்ன, ரோஜா ரோஜா தான் என்றார் சேக்ஸ்பியர். -

அவர் மாண்புமிகு கவியரசராக இருக்கலாம். மகாகனம் பொருந்திய நாடக சக்கரவர்த்தியாக இருக்கலாம். அதற்காக அவர் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட முடியுமா, நம்மால்? பெயரில் என்ன இருக்கிறதா? எவ்வளவோ இருக்கிறது.

இல்லாமலா பிறக்குமுன்பே கணவனும் மனைவியும் பிள்ளைக்கு என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம் என்று முதல் இரவிலேயே ஒரு கருத்தரங்கம் நடத்துகிறார்கள்; தங்கள் கற்பனைவளத்தைச் சோதித்துப் பார்க்கிறார்கள்.