பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எச்சில் துப்பிக் கொண்டு வேலையில் இறங்கும் ஒரு மொழி” என்று கார்ல் சாண்ட்பெர்க் வர்ணித்தார். அந்த மொழிக்கு மிக நெருங்கிய எளிமையும், கவிதையின் எழிலும் உடையது மீரா நடை!

ஜூனியர் விகடனில் 2-11-83 முதல் 1-1-84 வரை மீரா எழுதிவந்த பத்துக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ‘மகியின்’ அற்புத ஒவியங்களுடன். ‘வா இந்தப்பக்கம்’ என அழைப்பில் தொடங்கி ‘திருவிழா வருகிறது, தேர் வருகிறது’ என்று தேர்தல் வேடிக்கை காட்டி முடிகிறது நூல். இறுதி வரியும் (அந்தாதி போல்) ‘வா இந்தப் பக்கம்’ என்று முடிவது மீராவின் தீராத விளையாட்டுக் குறும்பைக் காட்டுகிறது. ஒவ்வொன்றும் வேறுவேறு பொருட்கள் பற்றி எழுதப் பெற்றவை எனினும் அனைத்திலும் நம் அரசியல் சமுதாய வாழ்வே பிரதிபலிக்கிறது. வெளியிட்ட பத்திரிகை அரசியல், சமுதாய அவலங்களை அம்பலப்படுத்தும் இதழ் என்பதால் நேர்ந்தது அல்ல இது. மீராவின் இயல்பே அதுதான் என்பதால் விளைந்தது. அவருக்கென்று தனிப் பட்ட தேவைகள், தனிப்பட்ட கனவுகள் எதுவுமில்லை. அவர் ஒரு தனி, மனிதத் தீவல்லர். சமுதாய மனிதர், புறவயமானவர் (Extravert). காதலைக் கூட அவரால் அரசியல், சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில்தான் பார்க்கமுடியும், பாடமுடியும். ஞாயிற்றுக் கிழமைக் கட்டுரையில் கூடத் தனக்காகவா வருந்துகிறார்? பிழைகள் தரும் இன்பம் பற்றி எழுதும்போதும் எழுத்துப் பிழைகளை ரசிக்கும் இவருக்கு சமுதாயத்திலுள்ள கருத்துப்பிழைகள் கண்ணை உறுத்துகின்றன. இவர் எழுத்துக்கள் வாயில் ஊறி வயிற்றினுள் எச்சில் அல்ல. வரம்பற்ற மகிழ்ச்சியிலும், அளவற்ற துயரத்திலும்

6