பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 81

ஆட்சிக்கு வரும் யாரும் வேறு எந்தச் சீர்திருத்தம் செய்யாவிட்டாலும் பெயரளவிலாவது ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. 28 ஊர்ப்பெயர்களை மாற்றினோம், 78 தெருப் பெயர்களை மாற்றியுள்ளோம். 118 சந்துப் பெயர்களை மாற்றியுள்ளோம் என்று இனிமேல் ஆட்சியில் உள்ள கட்சி தங்கள் சாதனைப் பட்டியலில் அதையும் ஒர் அம்சமாகச் சேர்த்தாலும் சேர்க்கலாம்.

ஒரு நகரத்தில் புதிதாய் உருவாகும் பெரியதும் சிறியதுமான இரண்டு தியேட்டர்களுக்குப் பொருத்தமான பெயர் எழுதி அனுப்புபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்து என் மாணவர் ஒருவர் ஏழைத் தருமியைப் போல் என் உதவியை நாடினார். ஊர்வசி மாதவி அல்லது மேனகை சகுந்தலை என்ற பெயர்களை எழுதிக் கொடுத்தேன். இலக்கியம் படித்தவர்களுக்குத் தெரியும் ஊர்வசியின் மரபில் வந்தவள் மாதவி, மேனகையின் மகள் சகுந்தலை என்று.

தியேட்டர் முதலாளி இந்த இலக்கிய வம்புக்கெல்லாம் போகாமல் ஏதோ சினி மினி என்று பெயர் வைத்து விட்டார். என் மாணவர் பரிசு கிடைக்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டுச் சொன்னார். அந்தச் சில நிமிடங்களிலாவது நான் சிவபெருமானாக இருந்திருந்தால் என் மாணவருக்காக நெற்றிக் கண்ணைத் திறந்திருக்க முடியும்.

என் நண்பர் ஒருவர் ஒரு நாள் என்னைத் தேடி ஒடோடி வந்தார். 'என்ன விஷயம்’ என்று கேட்டேன். நீங்கள் பெரிய கவிஞர், வார்த்தை தமிழுக்கு வழங்கும் வள்ளல்.... என் காதலியின் பெயர் சரித்திர காலப் பெயராக