பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 83

போது என் நண்பர், தம் மனைவியைப் பெயர் சொல்லி அழைத்து காபி கொண்டு வரச் சொன்னார். மூன்றாவது தடவை நான் போனபோது சும்மா இருக்காமல் அரைகுறை ஞாபகத்தில் நண்பரின் குழந்தையை இங்கே வாம்மா ரோஸி என்று அன்பாய் அழைத்தேன்... நாகரிகமாக என் நண்பர் சிரித்தபோது தான் லூசி என்று அழைப்பதற்குப் பதிலாக ரோஸி என்று அம்மா பெயரை அழைத்தது புரிந்தது. எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஏதோ ஒரு குற்ற உணர்வோடு நண்பரின் முகத்ததைக் கவனித்தேன். கொஞ்சமும் களங்கமில்லாமல் நண்பரின் முகம் 'எடுக்கவோ கோக்கவோ என்று கர்ணனிடம்கேட்ட துரியோதனன்முகம் மாதிரி இருந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் இது. -

பல ஆண்டுகளுக்கு முன்பு விகடனில் வெளிவந்த பில ஹரியின் சிறுகதை.... கதையின் பெயர் "ப்..பூ பணக்கார வீட்டுப் பையன் ஒருவனின் பிறந்த நாள்விழா, ஏழு வயதில் அடி எடுத்து வைக்கும் அவனை வாழ்த்துவதற்கும் வயிறு நிறையச் சாப்பிடுவதற்கும் உற்றார் உறவினர்கள் கூடியிருக்கிறார்கள். பையனோ வாசலில் பரட்டைத் தலையோடும் பசியோடும் நிற்கும் ஏழைப்பையன் ஒருவனைப் பார்க்கிறான். பிறந்த நாள் அலங்காரத்தைச் சுமந்தபடி அவனுக்குச் சாதம் சாம்பார் கறி எல்லாம் கொண்டு வருகிறான். எத்தனையோ இடங்களில் வசைமாரி பொழிந்து விரட்டி அடித்தாலும் விடாமல் ஐயாசாமி என்று கெஞ்சும் அவனை, தன்னைவிட வயதில் சிறியவனான ப்ணக்காரப் பொடியனிடம் பிச்சை வாங்கலாமா என்ற ஒரு தன்மானம் உறுத்துகிறது. அந்த