பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ւճaո Հ 93

ஏக்கத்துடன் எதிர்ப்பார்ப்பதுண்டு. வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை வரும்; விடியும்.

இன்று விடுமுறைதானே என்று கொஞ்சம் தாமதமாகவே எழுந்திருப்பதுண்டு. வாரத்தின் மற்ற நாட்களில் இல்லாத அளவு சுவையாகச் சமைக்கச் சொல்ல வேண்டுமென்று கடையில் கறி காய் வாங்கி மனைவியிடம் கொடுத்துவிட்டு, குளியல் சிற்றுண்டி முடித்து அமரவே மணி 12 ஆகிவிடும். அதன் பிறகு ஒரு மணி நேரம் வாரமலர்களைப் புரட்டுவதில் கழியும். இப்படி அரைநாள் ஒடிவிடும். போகட்டும் என்று மதியத்துக்கு மேல் எழுதலாம் என்று உட்கார்ந்தால் வானொலி அலறும். விடுமுறை விருப்ப நிகழ்ச்சினை ஒலிபரப்பும். வீட்டில் அவ்வளவு பேருக்கும் அதி விருப்பம். அதை எப்படித் தன்னந்தனியாக நான் எதிர்க முடியும்?

பரவாயில்லை; இன்னொரு ஞாயிறு வரட்டும் பார்த்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறதா? இன்னொரு நாள், இந்த ஞாயிற்றுக்கிழமை எங்கேயும் போகக்கூடாது, தூது"க்கு ஒரு நெடுங்கவிதை எழுதிவிடவேண்டும் என்று காகிதமும் பேனாவுமாய் அமர்ந்தால் வாசல் மணியோசை கேட்கும்... தொடர்ந்து மாடிப்படிகளில் யாரோ நடந்து வரும் காலடி ஓசை கேட்கும்... மலையேறிப் போனாலும் விடாத மைத்துனர் மாடியேறி வந்துவிடுவார். அவர் பின்னால் வரும் தீராத விளையாட்டுப் பிள்ளைகளில் ஒன்று என் மடியேறி அமர்ந்து கொண்டு பேனாவை வாங்கிக் காகிதத்தில் கோழிமுட்டை போட ஆரம்பிக்கும். அவ்வளவுதான்... இந்த ஞாயிறும் இன்னொரு ஞாயிறே என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.