பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா & 97

நடந்தும் கிடையாய்க் கிடந்தும் தரிசிக்க வேண்டும். தேர்தல் வந்துவிட்டால் போதும்... கோட்டையில் கோயில் கொண்டுள்ள நம் அரசியல்வாதிகள் எல்லாம் ஜீப்பிலும் வானிலும் மக்களைத் தேடித் தெருத்தெருவாய், வாசல் வாசலாய் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே வருவது 'திவ்யமாய் இருக்கும்!

ஆண்டு முழுவதும் எதையாவது சுமந்தும் தூக்கியும் குனிந்தும் பாடுபடும் ஏழை மக்கள் வண்ண உடை உடுத்தி மகிழ்ச்சியாய்க் கையை வீசிச் செல்லும் ஒரே ஒரு நாள் கிராமத்துத் திருவிழாதான் என்று டாக்டர் மு.வ. வர்ணிப்பார். அதேபோல், தேர்தல் திருநாளில் மட்டும்தான் இந்நாட்டு மன்னர்களுக்கு ஏகப்பட்ட செல்வாக்கு.

தீபாவளிக்குத் தீபாவளி மருமகனுக்குக் கிடைக்கும் எண்ணெய்க் குளிப்புப் போல் ஏகப்பட்ட மரியாதை!

திருவிழாவில் செல்லாத காசைச் செல்லவைக்கும் சிறுவர்களின் சாமர்த்தியம் நம் நாட்டுச் செல்வர்களுக்கும் கைவந்த கலை.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த - கருப்புப் பணத்தை ஒழிக்க - அரசாங்கம் நூறு ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கலாம் என்று சிலர் யோசனை சொல்வதுண்டு. என் யோசனை, அதற்குப் பதிலாக தேர்தல் என்று அறிவித்தால் போதும். பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப் பணம் காவிரி வெள்ளமாய்ப் பாயும்... பலருக்கும் போய்ச் சேரும்.

நம் தலைவர்கள் ஜனநாயக சோசலிசம் ஜனநாயக சோசலிசம் என்று ஓயாமல் முழங்கியதன் அர்த்தம் இப்போதுதானே புரிகிறது.