பக்கம்:விசிறி வாழை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 விசிறி வாழை

பசி தாங்கவில்லை. அத்தையைக் காளுேமே... அத்தே ! அத்தே! நீ வரப் போகிருயா...நான் சாப்பிடட்டுமா?’’

ஞானம் புகையப் புகைய கோஸ் கறியைக் கொண்டு வந்து பறிமாறினுள். அவசரமாக அதைச் சட்டென்று எடுத்து வாயில் போட்டுக்கொண்ட ராஜா, நாக்கைச் சுட்டுக் கொண்டு சூடு பொறுக்காமல் திணறிப் போய் பூ பூ!’ என்று வாய்க்குள்ளாகவே ஊதிச் சுவைத்துக் கொண் டிருந்த இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே வந்த பார்வதி, சிரிப்பை அடக்கிக்கொண்டவளாய், ஏண்டா! ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லயா? உனக் காக நான் இத்தனை நேரம் காத்திருந்தேனே, நான் வருவ தற்குள் என்ன அவசரம் வந்து விட்டது உனக்கு?’’

ராஜா பதில் கூறவில்லை. பதில் கூறும் நிலையில் இல்லையே அவன் !

துல்லியமாக, எளிமையாகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் பார்வதி. ஒரு கல்லூரியின் பிரின்ஸிபால் என்று கூறுவதற்குரிய வயதோ, தோற்றமோ, ஆடம்பரமோ அவளிடம் காணப்படவில்லே. அவளுடைய ஆழ்ந்த படிப்பும், விசாலமான அறிவும் அவளுடைய எளிமை யான அடக்கமான தோற்றத்தில் அமுங்கிப் போயிருந்தன. நாகரிகம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகள் தங்களே அலங்காரம் செய்துகொண்டு வரும் அவலட்சணங்களைக் காணும்போதெல்லாம், அந்த அநாகரிகமான பண்பற்ற கோலங்களைக் கண்டிக்கத் தவறியதில்லே அவள்.

‘ஏண்டா கறியைச் சுடச் சுட விழுங்கி விட்டாயா? அவசரக் குடுக்கை ! ஆத்திரப்பட்டால் இப்படித்தான் ஆகும்.’’ பார்வதி தன் செல்ல மருமகன் ராஜாவை நாகுக் காகக் கண்டித்தபடியே மணமீது அமர்ந்தாள்.

‘அதற்காக ஆறிப் போகும்படியும் விடக்கூடாது அத்தை அப்போது ருசியை இழந்து விடுவோம்’’ என்றான் ராஜா.

பார்வதிக்குச் சுருக்கென்றது. ‘அளவுக்கு மீறிக் காலம் கடத்துவதும் கூடாதுதான்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/10&oldid=686946" இலிருந்து மீள்விக்கப்பட்டது