பக்கம்:விசிறி வாழை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பத்து

பகலின் ஒளி மங்கி, அந்தியின் இருள் மயங்கும் சந்தி நேரத்தில் வானத்தில் கண் சிமிட்டும் வைர மலர்களைக் கடற் கரையில் உட்கார்ந்தபடியே கண்டு களித்துக்கொண்டிருந் தான் ராஜா. அவனருகில் அமர்ந்திருந்த பாரதி, கடல் அலை களையும். அவற்றுக்குப் பின்னல் உயர்ந்தும் தாழ்ந்தும் மிதந்துகொண்டிருந்த நிழல் சித்திரம்போன்ற படகுகளை யும் பார்த்துக்கொண்டிருந்தாள். \

ஜன சந்தடி அதிகமில்லாத இடமாகப் பார்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்று, அவர்களுக்குப் பின்னணி யாக அமைந்திருந்தது.

படகிலே ஒரு முறை பிரயாணம் செய்ய வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது?’ என்றாள் பாரதி.

‘எனக்கும் கூடத்தான்; ஆல்ை அதற்கு ‘விலா?வும் போஸ் போர்ட்'டும் வாங்க வேண்டும்?’ என்றான் ராஜா.

கைப்பலில் வெளி நாட்டுக்குப் பயணம் செய்வதாயிருந் தால்தானே அதெல்லாம் வாங்க வேண்டும்?? பாரதி கேட்டாள்.

‘இல்லை, படகிலே போவதாயிருந்தாலும் வேண்டும். நீயும் நானும் வாழ்க்கைப் படகில் பயணம் செய்யவேண்டு மால்ை, அதற்கு என் அத்தையிடமும், உன் தந்தையிடமும் ‘பாஸ்.போர்ட் வாங்கியாக வேண்டும்?? என்றான் ராஜா.

பாரதி சிரித்துவிட்டாள். - சிைனிமாவிலே காதலர்கள் டுயட்’ பாடிக்கொண்டு படகில் போவார்களே, அது எனக்குக் கட்டோடு பிடிக் காது’ என்றான் ராஜா.

  • ஏன்?’ என்று கேட்டாள் பாரதி. ‘அந்தக் காதலர்கள் நாமாக இல்லையே என்றுதான்!?? என்றான் ராஜா,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/101&oldid=686948" இலிருந்து மீள்விக்கப்பட்டது