பக்கம்:விசிறி வாழை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 விசிறி வாழை

கரையை நோக்கி வந்து கொண்டிருந்த படகுகளைப் பார்த்தபடியே, ‘முதன்முதல் இந்தப் படகைக் கண்டு பிடித்தது யார்?’ என்று கேட்டாள் பாரதி.

  • நான்தான்’ என்றான் ராஜா. நீேங்களா? என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் பாரதி. **ஆமாம், இப்போது நாம் சாய்ந்து கொண்டிருக் கிருேமே இந்தப் படகையும், இந்த இடத்தையும் கண்டு பிடித்தது நான்தானே!’’ என்றான் ராஜா,

ரேடியோ குவிஸ் புரோகிராமில் படகைக் கண்டு பிடித்தது யார்?’ என்று கேட்டால், இந்த மாதிரிப் பதில் சொல்லி வைக்காதீர்கள்! உங்கள் என்ஜினி ரிங் காலேஜூக்கே அவமானம்!” என்றாள் பாரதி, -

  • எங்கள் என்ஜினிரிங் காலேஜ் அதற்காக ரொம்பப் பெருமைப்படும். படகைக் கண்டுபிடித்த அறிவாளியை இந்த உலகத்துக்கு அளித்த பெருமை எங்கள் கல்லூரிக்குக் கிட்டுமல்லவா...’

போதும் உங்கள் தமாஷெல்லாம்! நான் இப்போது ஒரு முக்கியமான கேள்வி கேட்கப் போகிறேன். அதற்குக் கொஞ்சம் ஒழுங்காகப் பதில் சொல்ல வேண்டும்... தெரியுமா?

  • அதோ பட்டாணி சுண்டல்காரப் பையன் வருகிருன். முதலில் இரண்டு பொட்டலம் சுண்டல் வாங்கிக் கொண்டு விடுகிறேன். அப்புறம் பேசலாம்.’’ என்றான் ராஜா.
  • உங்களுக்குச் சுண்டல் என்றால் ரொம்பப் பிடிக்குமா??? *அதெல்லாம் ஒன்றுமில்லை. சுண்டல் வாங்கவில்லை யென்றல், அந்தப் பையன் திரும்பத் திரும்ப இந்தப் பக்கம் வந்து, நம்மையே சுற்றிக் கொண்டிருப்பான்...’ என்று கூறிய ராஜா, அந்தச் சுண்டல்காரப் பையனே அருகில் அழைத்து இரண்டு பொட்டலம் சுண்டலே வாங்கிக் கொண் டான். அந்தப் பையன் அப்பால் போனதும், ...ம்...... இப்போது கேள்-பதில் சொல்கிறேன்’ என்றான் ராஜா.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/102&oldid=686949" இலிருந்து மீள்விக்கப்பட்டது