பக்கம்:விசிறி வாழை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 விசிறி வாழை

வனிடம் நன்றியோடு இருக்கவேண்டும் என்பதற்குத்தான், ஒரு வேளை உணவு படைப்பவர்களை உப்பிட்டவர்கள் என்று கூறி அவர்களை உள்ளளவும் நினை என்கிருேம். கடவுள் இந்த உலகத்து மக்களுக்கெல்லாம் உணவைப் படைத்து வைத் திருக்கிறார். அந்த உணவுக்கு வேண்டிய உப்பையும் படைத்து வைத்திருக்கிறார். உலகத்தில் வாழும் உயிர்களுக் கெல்லாம் உப்பிட்டு வரும் அந்தக் கடவுள், கடல் நீரில் கலந்திருக்கும் உப்பைப் போலவே நம் கண்ணுக்குப் புலகைாத சூட்சும வடிவத்தில் இருந்து வருகிறார்’ என்றான் பாரதி ராஜாவையே வியப்புடன் பார்த்துக் கொண் டிருந்தாள்.

“என்ன பாரதி! அப்படிப் பார்க்கிறாய்? எனக்கு இவ்வளவு ஞானம் எப்போது வந்துவிட்டது என்றுதானே? இன்று காலேயில்தான்...என். அத்தையின் மேஜை மீது கிடந்த ஒரு புத்தகத்தில் இந்த விஷயத்தை இன்று காலேயில்தான் படித்தேன்...” என்றான் ராஜா.

கையில்ை மணலேக் கீறியபடியே, ராஜா கூறிய உயர்ந்த தத்துவத்தை எண்ணி, வியந்துகொண்டிருந்த பாரதி சட்டென, ஐயோ!’ என்று அலறியபடி கையை உதறிக் கொண்டாள். -

அவள் வலது கை ஆள்காட்டி விரலில் இரத்தம் பெருகி வழிவதைக் கண்டு பதறிப்போன ராஜா, என்ன பாரதி, கையை ஏதாவது கீறிவிட்டதா என்ன?’ என்று கேட்டான். ஆைமாம், கண்ணுடித் துண்டு’ என்று மணலில் புதைந்து கிடந்த ஒரு பெரிய கண்ணுடித் துண்டை எடுத்து ராஜாவிடம் கொடுத்தாள் பாரதி.

‘இந்தக் கண்ணடித் துண்டு உன் கையைக் கீறியதா, அல்லது உன்னுடைய கை கண்ணுடித் துண்டைக் கீறியதா?’ என்று கேட்டான் ராஜா.

சினிமாக்களில் கதாநாயகிக்கு ஏதாவது ஆபத்து நேரும் போது (அதுதான் நேருமே), கதாநாயகன் அவளைக் காப்பாற்ற ஓடி வருவான். அச்சமயம், வில்லனுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/104&oldid=686951" இலிருந்து மீள்விக்கப்பட்டது