பக்கம்:விசிறி வாழை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பத்து - 101

அவனுக்கும் சண்டை நடக்கும். அந்தச் சண்டையில் கதா நாயகன் வெற்றி பெறுவான். உடனே கதாநாயகி, கதா நாயகனைக் காதலிக்கத் தொடங்கி விடுவாள்.

ராஜா தன்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு நிகழ்ச் சியை எதிர்பார்க்கவில்லே யென் ருலும், அந்தக் கண்ணுடியை ஒரு வில்லனாகவே மதித்து அதைக் கடலில் வீசியெறிந்தான். உடனே எழுந்து சென்று தன்னிடமிருந்த கைக்குட்டை யைக் கடல் நீரில் நனைத்து வந்து அவள் கைவிரலேச் சுற்றிக் கட்டினன். இரத்தப் பெருக்கு நின்றது.

மணலில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அஜாக்கிரதையாகக் கீறில்ை, இப்படித்தான் நேரும்’ என்றான் ராஜா.

‘ஆமாம்; சுவரில் ஆணி அடிக்கும்போதுகூட ஜாக்கிர தையாகத்தான் இருக்கவேண்டும்’ என்றாள் பாரதி.

அன்றாெரு நாள், கல்லூரி ஆண்டு விழாவின்போது சுத்தியலால் தன் கைவிரலே நசுக்கிக் கொண்டதையும், பாரதி அப்போது தன் கைக்குட்டையால் கட்டுப் போட்ட தையும் பாரதி சுட்டிக் காட்டுகிருள் என்பதை ராஜா புரிந்துகொண்டான். -

‘நீ ரொம்பப் பொல்லாதவள்!’ என்று பாரதியின் கன்னத்தை லேசாகக் கிள்ளினுன் ராஜா. தன் கரங்களால் அவன் கைகளைத் தடுத்தபடியே ராஜாவையே கண் கொட் டாமல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் பாரதி. திடீ ரென ஏதோ நிகணத்துக் கொண்டவள்போல், இப்போது நான் என் கைவிரலைக் கீறிக் கொண்டதுபற்றி மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றாள்.

அவள் அப்படிக் கூறியபோது ராஜாவுக்குப் பெருமை தாங்கவில்லை. பாரதி தன்மீது கொண்டுள்ள அன்பைத் தான் இப்படி மறைமுகமாகச் சொல்லுகிருள் என்று எண்ணி மகிழ்ந்தான் அவன். -

அவன் அவ்வாறு மகிழ்ந்துகொண்டிருந்தபோே த, “என் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா? இந்தக் கைக்குட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/105&oldid=686952" இலிருந்து மீள்விக்கப்பட்டது