பக்கம்:விசிறி வாழை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பத்து 103

டாம், ராஜா பசியே இல்லே. நீ சாப்பிடு போ’ என்று கூறி அனுப்பிவிட்டு அப்படியே எழுந்து போய்ப் படுக்கையில் சாய்ந்து கொண்டாள்.

இத்தனை நேரம் நீ எங்கே போயிருந்தாய்? என்று அத்தை கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று அஞ்சிக் கொண்டே வந்த ராஜாவுக்கு அவளுடைய பதில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

“சரி, அத்தை நான் போய்ச் சாப்பிடுகிறேன்’ என்று கூறிக்கொண்டே கீழே இறங்கிப் போய்விட்டான் ராஜா.

சீக்கிரமே சாப்பாட்டை முடித்துக்கொண்ட ராஜாவும் அன்று அதிக நேரம் கண் விழித்துக் கொண்டிருக்கவில்லை. அவனுடைய நினைவெல்லாம் பாரதியைப் பற்றியதாகவே இருந்தது. அவளுடன் கடற்கரையில் உட்கார்ந்து உல்லாச மாக உரையாடிக் கொண்டிருந்த இன்ப நினைவுகளிலேயே அவன் எண்ணம் லயித்திருந்தது.

ரேடியோவைத் திருகிச் சற்றுநேரம் இங்கிலீஷ் பாட்டு களைக் கேட்டுவிட்டு உறங்கப் போய்விட்டான்.

மணி பன்னிரண்டுக்குமேல் இருக்கலாம். பார்வதி படுக் கையில் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டேயிருந் தாள். எந்த நாளிலும் அவளுக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டதில்லை, -

சேதுபதியின் நினைவு மயக்கம் அவள் உறக்கத்தை விழுங்கிவிட்டிருந்தது. மயக்கமும் உறக்கமும் கலந்த கனவு நிலையில் புரண்டு கொண்டிருந்த பார்வதியின் இதழ்கள் அவளேயும் அறியாமல் புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தன. அந்தக் கனவிலே அவள் சேதுபதியின் புறத் தோற்றத்தைக் கண்டுவிட்டுச் சிரிக்கவில்லை.

அன்று மாலே அவர் கூறிய உயர்ந்த கருத்துகள், எந்த விஷயத்திலும், அவருக்குள்ள ஆழ்ந்த ஞானம், உதாரணங் களின் மூலம் விஷயத்தைத் தெளிவாக்கித் தரும் ஆற்றல் இவ்வளவும் அவள் உள்ளத்தில் பதிந்து போயிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/107&oldid=686954" இலிருந்து மீள்விக்கப்பட்டது