பக்கம்:விசிறி வாழை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஒன்று 7

ராஜா எதை மனத்தில் எண்ணிக்கொண்டு இப்படிச் சொல் கிருன்? இவனுக்குத் திருமணம் செய்யும் காலத்தைக் கடத்தி விடக் கூடாது என்று எச்சரிக்கிருன? அல்லது...?

காலையில் மேஜைமீது ஆறிக்கிடந்த காப்பியை அருந்தும் போதுகூட அவளுக்கு இந்த எண்ணம் உண்டாயிற்று. சிந்தனையில் லயித்துக் காப்பியின் ருசியை இழந்து விட்டது கால தாமதத்தில்ை நேர்ந்த இழப்புத்தானே?

‘ஒன்றை இழந்தால்தான் இன்னென்றின் சுகத்தைப் பெற முடியும். எதை அடைய விரும்புகிருேமோ, எந்த மாபெரும் காரியத்தைச் சாதிக்க விரும்புகிருேமோ, அந்தக் காரியமே நமது வாழ்க்கையின் குறிக்கோளாகி விடும்போது மற்ற இன்பங்களெல்லாம் அற்பமாகி விடுகின்றன. உலகத் தில் அரும் பெரும் காரியங்களைச் சாதித்தவர்கள், சாதிப்ப வர்களின் வாழ்க்கையைத் துருவில்ை, அவர்களின் சரித் திரத்தை ஆராய்ந்தால் இந்த உண்மை நமக்குப் புலனுகாமற். போகாது. சிற்சில சமயங்களில் என்ன நான் மறந்து விடு கிறேன் என்பது உண்மைதான். ஆல்ை, அதல்ை என் வாழ்க்கையில் நான் பெறவேண்டிய இன்பத்தைப் பெறத் தவறி விட்டேன: காலம் கடந்துபோய் விட்டதா? - பார்வதியின் சிந்தனையைக் கலத்தான் ராஜா. ‘அத்தை இந்தச் செவிட்டுப் பெருமாளே எதற்காகத் தான் கேட்டில் உட்கார வைத்திருக்கிருயோ? காதுதான் கேட்கவில்லையென்றால் கண்களையும் மூடிக்கொண்டு நிம்மதி பாகத் தூங்கி விடுகிருனே 1:2

‘பாவம் அநாதைக் கிழவன். இந்த உலகத்தில் அவனுக்கு யாருமே இல்ல... அத்தோடு காது வேறு செவிடு. தன் வாழ்நாள் முழுவதும் நமது கல்லூரியிலேயே கழித்த வணக் காப்பாற்றுவது நம் பொறுப்பு இல்லையா?...?? ‘கல்லூரி ஆண்டு விழா என்றைக்கு அத்தை??? நோக்ளக்குத்தான். விழாவைச் சிறப்பாக நடத்தும் பொருட்டு எங்கள் கல்லூரிக்கு மூன்று நாள் விடுமுறை விட்டிருக்கிறேன் ராஜா ! உனக்கு இன்றும் நாளையும் லிவு தானே! நீயும் இப்போது என்னுடன் கல்லூரிக்கு வரலாம். நீ பெரிய என்ஜினியர் படிப்பு படிப்பவயிைற்றே! புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/11&oldid=686958" இலிருந்து மீள்விக்கப்பட்டது