பக்கம்:விசிறி வாழை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{08 விசிறி வாழை,

சேதுபதியைக் கண்டதும் திடுக்கிட்டுப்போன பாரதி, முன் ைெரு நாள் தான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?’ என்று தந்தை கேட்டதும், தான் அதற்குக் கல்லூரி ஹாஸ்டல் மாணவி யுடன் கணக்குப் பாடம் கற்றுக் கொண்டிருந்ததாகப் பொய் சொன்னதும், தான் கூறிய அதைப் பொய்யென்று புரிந்து கொண்ட அப்பா, அதை வெளியே காட்டிக்கொள் ளாமல் தன் வார்த்தைகளே நிஜமென்று நம்புவதுபோல் நடந்துகொண்டதும் அவள் நினைவுக்கு வந்தன.

அப்பா தூங்குகிருரா என்று கடைக் கண்ணுல் கவனித் துக்கொண்டாள். சேதுபதிக்குக் காது ரொம்பக் கூர்மை, துரங்கிக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் நிழலாடிலுைம் அறிந்து கொண்டுவிடுகிற சூட்சுமமான அறிவு அவருக்கு உண்டு. இன்று பாரதி வரும்போது அவர் விழித்துக் கொண்டுதான் படுத்திருந்தார். மணி ஒன்பதுக்குமேல் ஆகிவிட்டது என்பதையும், பாரதி லேட்டாக வீட்டுக்கு வந்திருக்கிருள் என்பதையும் அவர் உணராமலில்லை. ஆயி னும் பயந்தபடியே உள்ளே வந்துகொண்டிருந்த பாரதியை அவர் கண்டிக்க விரும்பவில்லை. எந்தவித உணர்ச்சியையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் மாலை ஐந்து மணிக்குக் கல்லூரியிலிருந்து வரும் பாரதியை எப்படி வரவேற்பாரோ அவ்வாறே வரவேற்றார்.

‘என்ன பாரதி’ யாரோ ஒரு பிரண்டைப் பார்க்கப் போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றாயே, பார்த்து விட் டாயா?’ என்று சகஜமாக விசாரித்தார்.

‘ஆமாம்.’’ என்று மெல்லிய குரலில் பதில் கூறினுள் பாரதி.

‘இத்தனை நேரம் சாப்பிடாமலா பேசிக் கொண்டிருந் தாய் வா, வா, உள்ளே போய்ச் சாப்பிடலாம். உனக்காக நானும் சாப்பிடாமல் காத்திருக்கிறேன்” என்று அன்பும் பரி வும் கலந்த குரலில் வரவேற்றார், தந்தையின் அன்பு மொழி களில் பாரதி மெய் சிலிர்த்துப்போனள். அப்பாவா இப்படிப் பேசுகிறார்? நிஜமாகவேதான் இப்படிக் கூறுகிருரா? அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/112&oldid=686961" இலிருந்து மீள்விக்கப்பட்டது