பக்கம்:விசிறி வாழை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினென்று 109.

கோபத்தை விழுங்கிவிட்டு மேலாக அன்பொழுகப் பேசு கிருரா?

எஏன் லேட்?’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே! நிஜமாகவே என்மீது கோபமில்லயா? அவருடைய சாந்த மான பேச்சும், அன்பும் வரவேற்பும் பாரதிக்குப் பெரும் வேதனையை அளித்தன.

அப்பா! நான் நேரம் கழித்து வீட்டுக்கு வந்திருக் கிறேன். இப்போது மணி ஒன்பது; தயவு செய்து என்னக் கொஞ்சம் கோபித்துக் கொள்ளுங்கள் அப்பா!’ என்று கெஞ் சிக் கேட்டுக்கொள்ள வேண்டும் போலிருந்தது. தன்னை அவர் கோபமாக நாலு வார்த்தை திட்டி அனுப்பில்ைதான் உள்ளம் அமைதியுறும்போல் தோன்றியது. ஆலுைம் தன் வேதனையை அடக்கிக் கொண்டவளாய் மெளனமாகச் சமையலறையை நோக்கி நடந்தாள் பாரதி.

சேதுபதிக்கும் பாரதிக்கும் மேஜைமீது உணவு தயா ராகக் காத்திருந்தது. தந்தையும் மகளும் அருகருகே அமர்ந் ததும், சேதுபதியின் சகோதரி உணவு வகைகளை ஒவ்வொன் ருக எடுத்துப் பரிமாறிள்ை. சேதுபதி எதுவும் பேசாமல் மெளனமாகவே சாப்பிடத் தொடங்கினர். அவர் முகத்தில் மகிழ்ச்சியில்லை. பேசிய இரண்டொரு வார்த்தைகளிலும் உற்சாகமில்லை. -

ஒருவன் எவ்வளவு துன்பங்களே அனுபவித்தபோதிலும் கவலைகள் பட்டபோதிலும் சாப்பிடும் நேரங்களில் மட்டும் எல்லாவற்றையும் மறந்து நிம்மதியுடன் சாப்பிடவேண்டும்’ என்று சேதுபதி அடிக்கடி கூறுவது வழக்கம். தம்முடைய அனுபவத்திலும் அவர் இந்தக் கொள்கையைக் கடை பிடிக்கத் தவறியதில்லை. வியாபாரத்தில் பல லட்சம் ரூபாய் நஷ்டமாகியிருந்தாலும் லாபமாகியிருந்தாலும் இரண்டையும் சமநிலையில் ஜீரணம் செய்துகொள்ளும் சக்தி அவருக்கு உண்டு. அவர் முகபாவத்திலிருந்து, லாபம் நஷ்டம் எதையும் கண்டுபிடித்துவிட முடியாது. அத்தகைய திடசித்தம் வாய்ந்தவர் முகத்தில் இன்று மட்டும் ஏன் இத்தனைக் கவலை? அமைதியின்மை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/113&oldid=686962" இலிருந்து மீள்விக்கப்பட்டது