பக்கம்:விசிறி வாழை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 விசிறி வாழை

அப்பாவின் கவலைக்கு என்ன காரணம்?’ என்று யோசித்தாள் பாரதி. தன் அண்ணனின் முகத்தில் என்று மில்லாத வருத்தம் சூழ்ந்திருப்பதன் காரணம் என்னவென்று புரியாமல் தவித்தாள் சேதுபதியின் தங்கை.

சேதுபதியின் கை விரல்கள் சாப்பாட்டை அளந்து கொண்டிருந்தன. அவர் உள்ளம் எங்கேயோ அலைந்து கொண்டிருந்தது.

மெளனமாக. இதைக் கவனித்துக் கொண்டிருந்த பாரதி யும் அத்தையும் ஒருவருக்கொருவர் ஜாடைகளாலேயே பேசிக் கொண்டனர்.

அப்பாவின் வருத்தத்துக்கு என்ன காரணம்? ஏன் சோற்றை அகாந்து கொண்டிருக்கிறார்? என்று பாரதி கேட் டாள். இல்லை, அவள் முகபாவமும் கைஜாடைகளும் அப்படிக் கேட்டன.

எனக்கென்ன தெரியும். உன் அப்பா சங்கதி? ஒரு வேளை பஞ்சு மில் தீப்பற்றி எரிந்து விட்டதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிருரோ என்னவோ?’ சேது பதியின் சகோதரி பதில் கூறிள்ை. இல்லே அவளுடைய கண்களும் அபிநயங்களும் அவ்வாறு பதில் கூறின.

மகளும் சகோதரியும் மெளன. மொழியில், அபிநயங் களின் மூலமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்த சேதுபதி லேசாகச் சிரித்துக் கொண்டே, ‘என்ன பாரதி: அத்தையும் மருமகளும் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நான் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறேன் என்றுதானே? பஞ்சு மில் எரிந்து போயிற்றே என்று நான் வருத்தப்படுவ தாக எண்ணுகிறீர்களா? வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் போது கவலைப்படுவது என்பது எனக்குத் தெரியாத விஷயம். பணம் வந்து போவதுபற்றி நான் எப்போதுமே கவலைப் பட்டதில்க்ல; கவலைப்படவும் கூடாது. ஆனல் படக்கூடாத ஆசைகழைப் பட்டுவிட்டு, அது நிறைவேருமல் போகும்போது வருந்த நேரிடுகிறதல்லவா? என் வருத்தத்திற்குக் காரணம் ஆசை நிறைவேறவில்லையே என்பதால் அல்ல. நிறை வேருத ஆசையை ஏன் பட்டோம் என்றுதான் வருந்து கிறேன்’ என்றார், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/114&oldid=686963" இலிருந்து மீள்விக்கப்பட்டது