பக்கம்:விசிறி வாழை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 விசிறி வாழை

விட்டதைப் போன்ற வருத்தம் ஏற்படுவானேன்? இதற் கெல்லாம் என்ன காரணம்?

சேதுபதியின் பார்வை தற்செயலாகச் சுவரில் மாட்டப் பட்டிருந்த அவருடைய மனைவியின் படத்தின்மீது சென்றது. அந்தப் படத்திலுள்ள சரஸ்வதியின் உருவம் சேதுபதியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தது. அந்தக் காட்சி, எனக்குத் துரோகம் செய்யலாமா?’ என்று, தன் குற்றத்தை எடுத்துக் காட்டிச் சிரிப்பதுபோல் தோன்றியது சேதுபதிக்கு.

சரஸ்வதிக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? பார்வதியை நான் விரும்புகிறேன்; அவள் துணையை நாடு கிறேன்; அவளிடம் பேசிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்; அவளைப் பிரிய நேரும்போது வருத்தமடை கிறேன்; உண்மைதான். இதனுலெல்லாம் சரஸ்வதிக்கு நான் எவ்விதத் துரோகமும் செய்துவிடவில்லேயே! சரஸ்வதி யைப் பிரிந்தது முதல்இேத்தனை ஆண்டுக் காலமும் வேறு எவளையும் சரஸ்வதியின் ஸ்தானத்தில் வைத்துப் பார்த்த தில்லை. விரும்பியதுமில்லே...பார்வதியிடம் நான் கொண் டுள்ள அன்புக்கு, ஆசைக்கு என்னல் விளக்கம் கூறமுடிய வில்லேதான். ஆனால் அது கேவலம் ஓர் ஆணுக்கும் பெண் ணுக்கும் இடையே தோன்றும் உடலாசையைப் பின்னணி யாகக் கொண்ட காதல் அல்ல. அவளை நான் விரும்பு கிறேன்...அவ்வளவுதான் ..

விளக்கை அனைத்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்து கொண்ட சேதுபதியின் உள்ளத்தில் அலே அலேயாக எழுந்த எண்ணங்களும் கேள்விகளும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு, ஒன்றுக் கொன்று பதில் கூறிக்கொண்டு அவரைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தன. குழம்பிய உள் ளத்துடன் அவர் விழித்துக் கொண்டிருந்தார்.

மணி பன்னிரண்டுக் குமேல் இருக்கும். சேதுபதி அயர்ந்து தூங்கத் தொடங்கினர். தூக்கத்தில் ஏதேதோ குழப்பமான கனவுகள். எல்லாம் பார்வதியைப் பற்றியவையே.

அந்தக் குழப்பத்திலும் அவர் முகம் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். அதற்கு என்ன காரணமோ? கனவிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/116&oldid=686965" இலிருந்து மீள்விக்கப்பட்டது