பக்கம்:விசிறி வாழை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 விசிறி வாழை

மேலும் ஒரு படி உயர்ந்துவிட்டது. அவருடைய அந்த மதிப் பீட்டில் பார்வதி உயர்ந்தது மட்டுமல்ல, சேதுபதி தம்மைத் தாமே ஒரு படி தாழ்த்திக்கொண்டார்.

‘மூக்குக் கண்ணுடியை மறந்து வந்துவிட்டீர்களே, இது ரொம்ப அவசியமல்லவா? வெளியூருக்குப் போகுமிடத்தில் இது இல்லை யென்றால், முக்கிய காரியம் கெட்டுப் போகுமே வேறு எதை மறந்தாலும் பரவாயில்லை. வேருென்று உடனே வாங்கிவிடலாம். மூக்குக் கண்ணுடியை நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாதே!’’ என்றுகூறி, அவள் அந்தக் கண்ணு டியை எடுத்து வெகு அலட்சியமாகக் கொடுத்தபோது அவள் முன் நான் எவ்வளவு சிறியவனுகி விட்டேன்? அவள் அந்த நேரத்தில் எவ்வளவு பொறுப்புடன், கண்ணியத்துடன் நடந்து கொண்டாள். நானே இன்று இன்ஷ9ரன்ஸ்பற்றிய பேச்சு எழுந்தபோது அவள் இன்ஷ9ரன்ஸ் கம்பெனிக்கு நஷ்டம் என்று கூறிய தவறைச் சுட்டிக்காட்டி, அவள் குற்றத்தை எடுத்துக்காட்டி அவளைத் திருத்த முற்பட்டேன். அவள் அறியாமையைச் சுட்டிக் காட்டியதும், அவள் தவறைத் திருத்தியதும் சரியாயிருக்கலாம். ஆல்ை அவளைத் தாழ்த்திவிட்ட குற்றம் என்னுடையதல்லவா? தெரியாமல் அவ்ஸ் நஷ்டம் என்று கூறியபோது நான் சிரித்திருக்கக் கூடாதல்லவா? தம்முடைய குணத்தையும் அவளுடைய பண்பையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்ட சேதுபதியின் எண்ணத்தில் பார்வதி மேலும் உயர்ந்து காட்சி அளித்தாள். அவளுக்கு முன்னல் தான் மேலும் ஒரு படி தாழ்ந்து விட்ட தாகக் கருதினர்.

எஇனி இம்மாதிரிக் குற்றத்தை ஒரு நாளும் செய்யமாட் டேன். யாரையும் குறை கூறி, அவர்கள் குற்றத்தை உணரச் செய்து, நம்மைக் காட்டிலும் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்கமாட்டேன். குறையை நாசூக்காகச் சொல்லித் திருத்தவேண்டும். அதுதான் பண்பு. ஒருவருடைய குறையை எடுத்துக் கூறும்போது, அவர்களை விட நாம் அறிவாளி என்ற அகம்பாவம் நம் உள்ளத்தில் ஏற் படக்கூடாது. நம்மைவிடச் சிறந்த அறிவாளிகள் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறர்கள். அவர்களுக்கு முன்னல் நாம் ஒரு சிறு துரும்பு.’ சேதுபதி ஒரு முடிவுக்கு

வந்தார். அந்த முடிவில் அவருக்கு ஒரு திம்மதி பிறந்தது. அப்படியே துங்கிப்போர்ை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/118&oldid=686967" இலிருந்து மீள்விக்கப்பட்டது