பக்கம்:விசிறி வாழை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 விசிறி வாழை

ள்ை. பலகணியின் வழியாகக் கீழ்த்திசையில் நிகழ்ந்து கொண்டிருந்த விடியற்காலே ஜாலங்களைப் பார்க்கலானுள். எதிலும் மனம் லயிக்காமற் போகவே, கீழே இறங்கிச் சென்று குளிர்ந்த நீரில் உடல் குளிரக் குளித்துப் பின்னர், உடை மாற்றிக் கொண்டு கண்ணுடியின்முன் சென்று தன் உருவத் தையே சற்றுநேரம் பார்த்துக்கொண்டாள். கூந்தலே அழகாகச் சீவி, கொண்டைபோட்டு, ஊசிகளால் அவற்றைக் கட்டுப்படுத்திய பின்னர், நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டு ஒருமுறை தலேயைச் சாய்த்துப் பார்த்தவளாய், *அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை நாற்பதுக்கும் ஒன்றிரண்டு வயது குறைவாகவேதான் மதிப்பிடலாம்?? என்று சமாதானம் சொல்வதுபோல் எண்ணிக் கொண் டாள்.

மேஜைமீது கிடந்த மூக்குக் கண்ணுடியை எடுத்துச் சீலையின் தலைப்பால் அதைத் துடைத்து அணிந்துகொண்ட பிறகு மீண்டும் ஒரு முறை, நிலைக்கண்ணுடியின் முன்போய் நின்று தன் உருவத்தைப் பார்த்தாள். இப்போது இரண்டு வயது அதிகமாகி விட்டது போல் தோன்றியது.

பேரவாயில்லே; வயது சற்று அதிகமாகத் தோன்றின லும், இந்தக் கண்ணுடி அணிந்த பிறகே முகத்தில் அறிவின் களை வீசுகிறது’ என்று தனக்குத்தானே திருப்தி அடைந் தாள்.

அடுத்த கணமே அவளுக்கு இன்னெரு எண்ணமும் உண்டாயிற்று. -

‘வயதைப்பற்றியோ, வசீகரத்தைப்பற்றியோ, இத்தஐனக் காலமும் ஏற்படாத கவலைகள் இப்போது மட்டும் தோன்று வானேன்? என் உள்ளத்தில் எழுந்துள்ள பலவீனமான எண்ணங்களுக்கு இதுவே அறிகுறியாக இருக்கலாமோ?” என்று யோசித்துப் பார்த்தாள்.

எஇதற்கெல்லாம் என்ன காரணம்? யார் காரணம்? ஆம்; சேதுபதியேதான். அவருடைய அறிவை, உறவை, பரிவை, அன்பு மொழிகளே என் உள்ளம் நாடுகிறது.

என் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறவும் முடிய வில்லை; மனத்திற்குள்ளே மறைத்து வைக்கவும் இயலவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/120&oldid=686970" இலிருந்து மீள்விக்கப்பட்டது