பக்கம்:விசிறி வாழை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பன்னிரண்டு 1 17

சோடா புட்டியின் நெஞ்சுக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கும் கண்ணுடிக் குண்டுபோல், சேதுபதிபற்றிய எண்ணம் என் நெஞ்சுக்குள் புகுந்து அலந்து கொண்டிருக்கிறது.”

‘என் உள்ளத்தை, உள்ளத்தில் புகுந்துகொண்டிருக்கும் இரகசியத்தை அவர் புரிந்து கொண்டிருக்கிருரா? புரிந்து கொண்டுதான் பேசாமல் மெளனம் சாதிக்கிருரா? நான் படும் வேதனைகளை அவர் அறிந்து கொண்டிருக்கிருரா? அல்லது அறிந்து கொண்டுதான் அறியாதவர்போல் நடித் துக் கொண்டிருக்கிருரா?

“அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறது, அவர் என்ன நேசிக்கிறார். என் உள்ளத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்! ஆமாம்; அதஞலேயே மாலே வேளைகளில் நான் அவர் வீட்டுக்குச் செல்லும் நேரங்களில் எனக்காகக் காத்திருக் கிறார். பாரதியே சொல்கிருளே, “கொஞ்ச நாட்களாகத் தான் அப்பா மால நேரங்களில் வீட்டில் தங்கியிருக்கிறார்’ என்று. அதற்கு என்ன காரணம்? எப்படி யெல்லாமோ பற் பல கோணங்களில் சிந்தித்துப் பார்த்தும், பார்வதியால், நிச்சயமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சேதுபதி உண்மையிலேயே அவன் நேசிக்கிருரா இல்லையா என்பதை அவளால் உறுதிப்படுத்த முடியவில்லை.

தன் எண்ணத்தை, ஆசையை வெளிப்படுத்த முடியாத நிலைமை ஒரு புறம், அவராகவே தன் நிலையைப் புரிந்து கொண்டும் மெளனம் சாதிக்கிருரா என்ற சந்தேகம் இன் ஒெரு புறம். அவருக்குத் தன்னிடம் அன்பு இருக்கிறதா இல்லையா-என்பதை அறிந்து கொண்டுவிட வேண்டுமென்ற துடிப்போடு இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள் பார்வதி. அப்போது மணி ஐந்தரைகூட ஆகவில்லை.

“இந்த நிலையை நீடிக்க விடக்கூடாது. மனத்திற்குள் ளாகவே வைத்துப் புழுங்கவும் கூடாது. இன்று இதற்கு ஒரு முடிவு கண்டுவிட வேண்டும், ஒரு சிறு சோதனையின்மூலம் அவர் எண்ணத்தைப் புரிந்துகொண்டு விடவேண்டும்’ என்று தீர்மானித்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/121&oldid=686971" இலிருந்து மீள்விக்கப்பட்டது