பக்கம்:விசிறி வாழை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதின்மூன்று

உயரமான மேடை. அதன்மீது ஒரு பெரிய பாருங்கல், நாலேந்து தொழிலாளர்கள் அந்தப் பாறையைக் கடப்பாரை யால் கீழே தள்ளுவதற்குத் தங்கள் பலம் கொண்டமட்டும் முயன்று பார்க்கிறர்கள். தொழிலாளர்கள். நரம்புகள் புடைக்கப் பாறையைத் தள்ளும் காட்சியைக் கற்சிலேயாக வடித்துக் கடற்கரையில் வைத்துள்ளான் சிற்பி ஒருவன்.

பாரதியைக் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ராஜா வுக்கு அவளை உடனே வீட்டில் கொண்டு விட்டுவிட மனமில் லாததால், சற்று நேரம் கடற்கரையிலேயே சுற்றிக் கொண் டிருந்தான். எங்கெங்கோ சுற்றிய பின்னர் கடைசியாக அந்தக் கற்சிலேயின் அருகில் போய்க் காரை நிறுத்திவிட்டு பாரதி! இந்தச் சிலை எவ்வளவு அழகாயிருக்கிறது. பார்த் தாயா?’ என்று கேட்டான்.

‘எனக்கு இதைப் பார்க்கவே சங்கடமாயிருக்கிறது’’ என்றாள் பாரதி.

ஏன்?22

‘அந்த மேடைமீது இன்னும்கூட இரண்டு தொழிலாளர் கள் நிற்பதற்கு இடமிருக்கிறதே, அப்படியிருக்கப் பாறையை ஏழெட்டுப்பேர் தள்ளுவதுபோல் செய்திருக்க லாமே என்றாள் பாரதி.

செய்திருக்கலாம்; ஏழெட்டுப்பேர் சேர்ந்து தள்ளில்ை பாறை கீழே விழுந்துவிடுமே!’ என்றான் ராஜா.

‘பாரதி சிரித்துக்கொண்டே, மிஸ்டர் டிரைவர்! நேர மாகிறது. காரை எடுங்கள். வீட்டுக்குப் போகவேண்டும்’ என்றாள்.

மிஸஸ் டிரைவர் இப்படி முன் எtட்டில் வந்து அமருங்கள். இல்லையென்றால் கார் இந்த இடத்தைவிட்டு நகராது?’ என்றான் ராஜா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/128&oldid=686978" இலிருந்து மீள்விக்கப்பட்டது