பக்கம்:விசிறி வாழை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதின்மூன்று 125

‘முடியாது; நம் இருவருக்கும் மனமாகும்வரை நான் முன் nட்டில் உட்காரமாட்டேன்’ என்றாள் பாரதி.

எநான் பின் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டால் கார் ஒட்ட முடியாதே’ என்றான் ராஜா.

பாரதி மீண்டும் சிரித்துக்கொண்டே, “மிஸ்டர் டிரைவர்! காரை எடுக்கப் போகிறீர்களா, இல்லையா?” என்று அதி காரம் செய்தாள். -

மேடம்! நீங்கள் முன் எமீட்டில் வந்து உட்காரப் போகிறீர்களா, இல்லையா?” என்று பாரதியின் காதைப் பிடித்து முன் வீட்டுக்கு இழுத்துச் சென்றான் ராஜா.

பாரதிக்கு ராஜாவின் அருகில் அமர உள்ளுற ஆசை தான் என்றாலும் மேலுக்கு விருப்பமில்லாதவன்போல் முகத்தை வைத்துக்கொண்டாள்.

காரை மெதுவாகச் செலுத்தத் தொடங்கின்ை ராஜா. இருவருக்கும் இடையே நிலவிய மெளனத்தைக் கலைப்பது போல், என்ஜினிரிங் படிப்பு முடிந்ததும் என்ன செய்யப் போகிறீர்கள் ராஜா?” என்று கேட்டாள் பாரதி,

எேன்ஜினிராகப் போகிறேன்; ஏன், எதற்காக?? என்றான் ராஜா.

  • அப்படியா நான் நினைத்தேன்...என்ஜினிரிங் படித்து விட்டு வக்கீல் தொழில் செய்வார்கள் என்று’ என்றாள் பாரதி.
  • பி.எஸ்ஸி. படித்து முடித்ததும் நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று ராஜா கேட்டான்.

‘யாரோ ஒருவரை கார் டிரைவாக அமர்த்திக்கொண்டு அந்த டிரைவரின் மிஸஸ் ஆகிவிடப் போகிறேன்’ என்று கூறிக் கல கல வெனச் சிரித்தாள் பாரதி.

  • அந்த யாராவது ஒருவர் யாரோ?’ என்று ஆவலோடு கேட்டான் ராஜா.

‘கரா...கஜா’ என்றாள் பாரதி. ‘கச.க.பா.கஷ்!” என்றான் ராஜா. கார் எங்கெங்கோ வளைந்து திரும்பிக் கடைசியில் பாரதி யின் வீட்டை நெருங்கிய சமயம் ராஜா காரை வேகமாகச் செலுத்த முற்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/129&oldid=686979" இலிருந்து மீள்விக்கப்பட்டது