பக்கம்:விசிறி வாழை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 விசிறி வாழை

அதைக்கண்ட பாரதி, மெதுவாகப் போங்கள். வீடு நெருங்கிவிட்டதே. தெரியவில்லையா?’ என்றாள்.

தெரிகிறது; அதல்ைதான் வேகமாகப் போகிறேன். இன்னெரு முறை சுற்றிவிட்டு வரலாமே?’ என்றான் ராஜா. “ஊஹஅம். கூடாது; நாம் இருவரும் இப்படியே சுற்றிக் கொண்டிருந்தால் கடைசியில் என் அப்பாவுக்கும் உங்கள் அத்தைக்கும் விஷயம் தெரிந்துவிடும்’ என்றாள் பாரதி.

தெரியட்டுமே; நம் திருமணத்தைப்பற்றி அவர்களிடம் கூறுவதற்கு நம் இரண்டு பேருக்குமே தைரியம் கிடையாது. அவர்களாகவாவது தெரிந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாமே!’’ என்றான் ராஜா.

பாரதி வீட்டுக்குத் திரும்பியபோது மணி ஒன்பதாகி விட்டது. தம்முடைய அறையில் தனியாக உட்கார்ந்து சிந்தனையில் ஈடுபட்டிருந்த சேதுபதிக்கு நேரம் போனதே தெரியவில்லை. சேதுபதியின் சகோதரி காமாட்சி அவரைச் சாப்பிட அழைத்தபோது, ‘பாரதி டியூஷனிலிருந்து வந்து விடட்டுமே!’ என்றார்.

சேதுபதியின் கவலே தோய்ந்த முகத்தைக் கவனித்த காமாட்சி, ‘அண்ணுவுக்கு என்ன கவலை? மலேயே புரண்டா லும் நிலை கலங்க மாட்டாரே! அவரா இப்படிக் கவலேயே உருவாக உட்கார்ந்திருக்கிறார்?’ என்று வேதனைப்பட்டாள். ‘என்ன அண்ணு உனக்கு? ஏன் ஒரு மாதிரியாக உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று காமாட்சி கேட்டதற்கு, “ஒன்றுமில்லேயே, ஏதோ யோசித்துக் கொண்டிருக்கிறேன்?? என்று சகஜமாகப் பதில் கூறி அனுப்பிவிட்டார் அவர்.

சற்று நேரத்துக்கெல்லாம் பாரதியும் வந்துவிட்டாள். அப்பா என்ன சொல்வாரோ?’ என்ற திகிலுடன் உள்ளே வந்து கொண்டிருந்த பாரதியைப் பார்த்துச் சேதுபதி, ‘என்னம்மா இவ்வளவு நேரம்? டியூஷனுக்கு நேரமாகி விட்டதா! வா சாப்பிடலாம்’ என்று அழைத்ததும் தான் பாரதிக்கு நிம்மதி ஏற்பட்டது.

‘இதோ வந்துவிட்டேன் அப்பா!’ என்று குதித்துக் கொண்டே ஓடினள். பாரதியும் சேதுபதியும் சாப்பிட்டுக்

வி. வா.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/130&oldid=686981" இலிருந்து மீள்விக்கப்பட்டது