பக்கம்:விசிறி வாழை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதின்மூன்று 129

எ.காமாட்சி! இந்த உலகத்தையே எதிர்த்துத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வைத்துக்கொள். அப்போது?...”

செய்து கொள்ளலாம்; ஆல்ை, நீ இந்த உலகத்தில் வாழவேண்டுமே...’

இதைக் கேட்ட சேதுபதி ஓ’ என்று எக்காளமிட்டுச் சிரித்தார், சிரித்துக்கொண்டே அசடே! சுத்தப் பயித்தி யமாயிருக்கிருயே! நான் விகளயாட்டாகச் சொன்னதை யெல்லாம் உண்மையென்று நம்பிவிட்டாயா? பாரதிக்குக் கலியாணம் செய்யவேண்டிய வயசிலே நான் திருமணம் செய்து கொள்வேனு? நிஜமாகவே நம்பிவிட்டாயா?? சேதுபதி கூறியது உண்மைதான். அந்த நிஜத்தை வாழ்க் - கையோடு விளையாடிப் பார்க்க எண்ணினர். அந்த எண்ணத் தைத்தான் சகோதரியிடம் வேடிக்கையாகக் கூறிப் பார்த் தார். காமாட்சியின் பதில் அவருக்கு வேதனையை அளிக் கவே, தன் வார்த்தைகளே வேடிக்கை என்று கூறி மழுப்பி விட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து போய்விட்டார்.

படுக்கையில் போய் சாய்ந்து கொண்டவருக்கு வெகு. நேரம் தூக்கம் வரவில்லை. இரண்டு கேள்விகள் அவர் உள் ளத்தில் புகுந்து மாறி மாறிக் குரல் கொடுத்துக் கொண் டிருந்தன. ஒவ்வொரு குரலும் தனித் தனியாகப் பேசும் போது அதனதன் கட்சியை வலிவாக வாதாடியது!

  • உலகத்தை எதிர்த்துத் தைரியமாக மணம் புரிந்து கொள் துணிந்து நிற்பதுதான் ஆண்மைத்தனம்’ என்றது ஒரு குரல். -

‘உலகத்துக்குத் தாழ்ந்துப் போய்விடு, அது தான் அடக்கம். அப்போதுதான் உலகோடு ஒட்டி வாழமுடியும்’ என்றது இன்னெரு குரல்.

இரு குரல்களும் மாறி மாறி எழுந்து முழுக் சக்தியுடன் அவருடன் போர் புரிந்தன. இரு எண்ணங்களுமே சரி சமமான பலத்தில் எதிர்த்து நின்றதால், அவற்றில் எது சரி எது தப்பு என்பதை அவரால் முடிவு கட்ட முடியவில்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது. கடைசியில் எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/133&oldid=686984" இலிருந்து மீள்விக்கப்பட்டது