பக்கம்:விசிறி வாழை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதின்மூன்று 181

எண்ணிக் கொந்தளித்திருப்பாள். அந்தக் கணமே மீளுவைத் தன் அறைக்கு அழைத்து வரச்சொல்லி, ஒழுக்கம் கெட்ட பெண்களுக்குத் தன் கல்லூரியில் இடமில்லை என்று ஏசி டிஸ் மிஸ் செய்து ஹாஸ்டலிலிருந்தும் வெளியேற்றியிருப்பாள். இப்போது அவள் பழைய பார்வதி அல்ல. முற்றிலும் மாறி விட்ட ஒரு புதுமைப் பெண்மணி.

மீனவின் தந்தை எழுதியிருந்த அக்கடிதத்தை எடுத்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தாள். அப்போதும் அவளுக்குக் கோபம் வரவில்லே.

“தங்கள் கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் பெண் கள் தகுந்த பாதுகாப்பின் கீழ் பத்திரமாகப் படித்து வருவார் கள். அவர்களுடைய ஒழுக்கம் கெட்டுப்போகாத முறையில் தாங்கள் கவனித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையும் நல்ல பெயரும் தங்கள் கல்லூரிக்கு எப்போதுமே உண்டு. அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் என் மகள் மீன வைத் தங்கள் கல்லூரி ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைத்தேன். இப்போது நான் கேள்விப்படும் செய்தி என்னைத் திடுக்கிடச் செய்துள்ளது.

eளு வேறொரு கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவன அடிக்கடி சந்திப்பதாகவும், அவனுடன் நட்பு கொண்டிருப்பதாகவும் எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்திருக்கிறது. இது உண்மையானல் இதைவிட அவக் கேடான செய்தி வேறென்றும் இருக்க முடியாது. இது பற்றித் தாங்கள் உடனே தீர விசாரித்து எனக்கு உண்மை யைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.:

பார்வதிக்கு வியப்பாக இருந்தது. இதில் உண்மை யிருக்குமா? என்று யோசித்துப் பார்த்தாள். மீன மிக நல்ல பெண். அப்படியெல்லாம் பண்புகெட்டு நடக்கக் கூடியவள் அல்ல’ என்றே கூறியது அவள் உள் மனம்.

மீனவையே நேரில் அழைத்துக் கேட்டுவிடலாம் என்ற முடிவுடன் ஆறுமுகத்தை அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னுள்.

மீன எதிரில் வந்து நின்றபோது பார்வதி சற்று நேரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/135&oldid=686986" இலிருந்து மீள்விக்கப்பட்டது