பக்கம்:விசிறி வாழை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 விசிறி வாழை

அவளேயே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பெண்ணுக் குப் பெண்ணே பார்த்து வியக்கும் அளவுக்கு அத்தனை அழகு! பார்வதியால் சட்டென்று விஷயத்தைப் பிரஸ்தாபிக்க முடியவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ கேள்விகளை யெல் லாம் கேட்டுவிட்டுக் கடைசியில் ஸ்போர்ட்ஸெல்லாம் இப் போது எந்த மட்டில் இருக்கிறது, மீன?’ என்று கேட்டாள். ‘பரீட்சை முடிகிற வரையில் அதைப்பற்றி நினைக்கவே நேரம் கிடையாது மேடம்’ என்றாள் மீன.

பேஷ்! அப்படித்தான் படிக்கவேண்டும். அது சரி; பீ.ஏ.வை முடித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்?’’

‘அப்பா என்ன சொல்கிருரோ, அதன்படி நடந்து கொள்வேன்...??

  • அப்பா கல்யாணம் செய்து கொள்ளச் சொன்னுல்...’

அவர் இஷ்டப்படியே நடப்பேன்.’’ அவர் தேர்ந்தெடுத்துச் சொல்லும் பையனை மணந்து கொள்வாயல்லவா?...”*

‘அதுதான் முடியாது; அந்த ஒரு விஷயத்தில் மட்டும் எனக்குச் சுதந்திரம் வேண்டும்.’

அப்படி யென்றால் நீயாகவே ஒருவனைத் தேர்த்தெடுக் கப் போகிருயா???

ஆைமாம்...?? என்று கூறியவள், வெட்கத்துடன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

மீேன அந்தப் பையன் யாரென்று என்னிடம் சொல்ல 6ir($unir???

மெளனமாக நின்றாள் மீன.

என்னிடம் வெட்கப்படாமல் சொல், பார்க்கலாம். இது விஷயத்தில் உனக்கு என்னலான உதவியைச் செய்கி றேன். உன் அப்பாவுக்கு நானே கடிதம் எழுதி, உன் திருமணத்தை முடிந்து வைக்கிறேன்...’

‘எனக்கு வெட்கமாக இருக்கிறது மேடம்...’ ‘மீன! என்னிடம் சொல்லுவதற்கு வெட்கப்படலாமா? எங்கே சொல்லு பார்க்கலாம்...”

தலையை நிமிர்த்திச் சொல்லுவதற்கு ஆயத்தமான மீனவை மீண்டும் வெட்கம் சூழ்ந்துகொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/136&oldid=686987" இலிருந்து மீள்விக்கப்பட்டது