பக்கம்:விசிறி வாழை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதின்னகு 185

பேசும்போது அத்துடன் இன்னொரு மொழியைக் கலந்து விடக்கூடாது என்பதில் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பவர்.

திருவாளர் வேதாந்தத்துடன் தமிழில் பேசுவதா, ஆங்கிலத்தில் பேசுவதா என்ற கவலே ஒருபுறமும், தன்னு டைய கல்லூரி மாணவி மீைைவப்பற்றி அவரிடம் எவ்வாறு பேச்சைத் தொடங்குவது என்ற அச்சம் இன்னெரு புறமும் பார்வதியை வாட்டிக் கொண்டிருந்தன.

‘எங்கே வந்தீர்கள், என்ன விஷயம்’ என்று வேதாந்தம் கேட்டால், விஷயத்தை எப்படித் தொடங்குவது?

தேங்கள் கல்லூரி மாணவன் கோபாலனைப்பற்றிப் பேச வந்திருக்கிறேன்’ என்று கூறி, மீனுவின் தந்தையிடமிருந்து வந்துள்ள கடிதத்தை அவரிடம்கொடுத்து விடுவதா? அல்லது பொதுவாகச் சில விஷயங்களைப்பற்றி முதலில் பேசிக்கொண் டிருந்த பின்னர், பேச்சுக்கிடையில் தான் வந்த காரியத்தை நாசுக்காக அறிவிப்பதா?

‘காதல், கல்யாணம் இவைபற்றி வேதாந்தம் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறார் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். பின்னர்தான் மீன விஷயத்தைப் பிரஸ் தாபிக்க வேண்டும். கோபாலனைப்புற்றிக் குற்றம் சொல்வ தாகவும் இருக்கக் கூடாது. நடந்திருப்பதையும் தெளிவாகச் சொல்லவேண்டும். காதல் விவகாரங்களில் அனுபவம் எதுவுமே இல்லாத பார்வதிக்கு இது ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. -

திருவாளர் வேதாந்தத்தைச் சந்தித்து உரையாடப் போவது இதுதான் முதல் தடவை. முதல் முறையாக அவரைச் சந்திக்கப் போகும்போது இம்மாதிரியான காதல் விவகாரத்தையா எடுத்துக் கொண்டு போகவேண்டும்?

இன்னெரு புறம் காதலைப்பற்றிய உணர்வு அவள் சிந்தனையைப் பகிர்ந்து கொண்டிருந்தது.

மீன-கோபாலன் நட்பில் குற்றம் இருப்பதாக அவ ளால் ஊகிக்க முடியவில்லை. தவறு ஏதும் நேராத வரையில் மீனவும் கோபாலனும் நெருங்கிப் பழகுவதை ஏன் ஆட் சேபிக்க வேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/139&oldid=686990" இலிருந்து மீள்விக்கப்பட்டது