பக்கம்:விசிறி வாழை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதின்ைகு 187 தம்முடைய அறைக்குப் பார்வதியை அழைத்துச் சென்றார்

அவர். . புன்சிரிப்பைத் தவிர, பார்வதியின் வாயினின்று எதுவுமே வெளிப்படவில்லை.

பேச்சை எப்படித் தொடங்குவது என்பதிலேயே அவள் மனம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தது.

கடைசியில், தங்களைச் சந்தித்துப் பேசும் பேறு எனக்குக் கிட்டியதற்காக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று பேச்சைத் தொடங்கிள்ை.

வேதாந்தம் சிரித்தார். கள்ளம், கபடறமற்ற அந்தச் சிரிப்பின்மூலமே தம்முடைய பதிலைக் கூறிவிட்டார் அவர். ‘தாங்கள் என்னைத் தேடிவந்த காரியம் என்னவோ?’’ ஆங்கிலத்தில் மிக மிகச் சரளமாகப் பேசும் திறமை பெற்றிருந்த போதிலும் வேதாந்தம் தூய தமிழிலேயே பேசினர்.

கார்நேஷன் கல்லூரி பிரின்ஸிபால் பதவி அவரைத் தேடி வந்ததற்குக் காரணம் அவர் தமிழில் பெரும் புலமை பெற்றவர் என்பதற்காக அல்ல. ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள ஞானமே அவரை இந்த நிலைக்கு உயர்த்தியது. ஆயினும், அவர் தம்மை ஒரு தமிழ்ப் புலவர் என்று கூறிக் கொள்வதிலேயே பெருமைப்பட்டார். தம்மைப் பொறுத்த வரையில் தமிழுக்கு உயர்ந்ததொரு ஸ்தானத்தைக் கொடுக்க வேண்டுமென்பதற்காகவே தலைப்பாகையைத் தலையிலே அணிந்து கொண்டிருந்தார்.

“வள்ளுவரைப்பற்றித் தங்கள் கருத்து என்னவென் பதை நான் அறியலாமா??-பார்வதி மிக மிக விநயமாகக் கேட்டாள். .

‘ வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு, என்று பாரதி பாடிய பிறகு, நான் கூறுவதற்கு என்ன இருக்கிறது:

“மன்னிக்க வேண்டும். இன்னெரு விஷயம்பற்றியும் தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். என்றாள் பார்வதி. ‘நன்று நன்று! தாராளமாகக் கேளுங்கள்’’ என்றார் வேதாந்தம். να.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/141&oldid=686993" இலிருந்து மீள்விக்கப்பட்டது