பக்கம்:விசிறி வாழை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 விசிறி வாழை

‘காதல் என்ற சொல்லுக்குத் தாங்கள் விளக்கம் தர முடியுமா;’’

‘காதல் என்ற புனிதமான சொல் ஆண் பெண் உறவு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. நான் தமிழ் மொழிமீது காதல் கொண்டுள்ளேன். சிலர் இந்திமீது காதல் கொண்டுள் ளார்கள். உங்களுக்கு உங்கள் கல்லூரியின்மீது காதல்.’

உண்மைக் காதலைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர் கள்?...??

  • அதுபற்றித் தனிச் சொற்பொழிவே நிகழ்த்த வேண் டும். ஆலுைம் ஒன்று கூறுவேன். காதல் என்பது ஆண் மகனுடைய வாழ்க்கையில் ஒரு பகுதிதான். ஆல்ை அதுவே ஒரு பெண்ணின் முழு வாழ்வுமாகும்.’’

‘மிக உயர்ந்த கருத்து...’ என்று பாராட்டினுள். ‘இக் கருத்து என்னுடையதல்ல. பைரனப் பாராட்டுங் கள்’’ என்றார் வேதாந்தம்.

  • அப்புறம்?’ என்பதுபோல் முகத்தை வைத்துக் கொண்டு வேதாந்தத்தையே கூர்ந்து நோக்கினுள் பார்வதி. ஒரு பெண்ணின் உள்ளத்தில் காதல் உணர்ச்சி தோன்றும்போதுதான் காதலைப்பற்றிய முழுச் சக்தியையும் அவள் அறிய நேரிடுகிறது’ என்றார் வேதாந்தம்.

கோதலேப் பற்றி வள்ளுவர்?...’ - *நிரம்பச் சொல்லி யிருக்கிறார். அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது, - -

“காணுங்காற் காணேன் றவருய

காணுக்காற் காணேன் றவறல்லவை ‘’ என்ற குறளாகும். காதலனை நேரில் காணும்போது காதலிக்கு அவனுடமுள்ள குற்றங்கள் எதுவுமே தெரிவ தில்லேயாம். அவனைக் காணுதபோது அவனிடமுள்ள குற்றங் களைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லையாம்! “ -

எேவ்வளவு அழகான கருத்து...’ என வியந்தாள் பார்வதி. -

‘வள்ளுவர் கூருத கருத்துகளே இல்லை” என்று மகிழ்ந்தார் வேதாந்தம். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/142&oldid=686994" இலிருந்து மீள்விக்கப்பட்டது