பக்கம்:விசிறி வாழை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 விசிறி வாழை

‘இந்த ஆண்டுடன் உன் படிப்பு முடிந்து விடுகிற தல்லவா?: -

    • ஆம்...’ “அப்புறம் என்ன செய்யப் போகிறாய்...?’ “ஏதாவது ஓர் அலுவலகத்தில் சேர்ந்து பணி புரியப் போகிறேன்...?? -

‘எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்?’ ‘என் தந்தை முடிவு செய்யும்போது...’ ‘உன் தந்தையாகப் பார்த்து முடிவு செய்யும் பெண்ண மணந்து கொள்ள போகிருயா? அல்லது...”*

‘அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள மாட் உார்,...”* -

‘அப்படியால்ை...” - z ‘நாகை ஒரு பெண்ணைத் தேர்ந்து மணம் செய்து கொள்வதற்கு அவர் தம்முடைய பூரண சம்மதம் அளிப் பார்...’

ஒரு வேளை நீ தேர்ந்தெடுக்கும் பெண்கண அவர் ஒப்புக் கொள்ளவில்லை யென்றால்?...??

‘ஒப்புக்கொள்ளமாட்டார் என்று ஏன் சந்தேகப்பட வேண்டும்? பொதுவாக உலகத்தில் நம்பிக்கைதான் முக்கி யம். ஆயினும், எல்லாவற்றிலுமே நம்பிக்கை வைத்துவிடக் கூடாது தான். அதற்காக எதையுமே நம்பாமலும் இருக்கக் கூடாதல்லவா???

  • கோபால் மிக அருமையாகப் பேசுகிருயே! இதுவரை விளையாட்டிலும் படிப்பிலும் மட்டுமே புத்திசாலி என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன். காதல் விவகாரத்திலும் நீ... வேதாந்தம் சிரித்தபடியே கூறினர்.

‘காதலா!... ‘ கோபாலன் சற்றுத் திகைப்போடு கேட்டான்.

‘காதலிப்பது தவறில்லை கோபால்! இதோ பார் இந்தக் கடிதத்தை...’’ - -

கடிதத்தை வாங்கிப் படித்த கோபாலன், ‘ஐயா, மீளுவை நான் நேசிப்பது உண்மைதான். ஆளுல் எங்கள் நட்பில் முறைகேடு எதுவும் கிடையாது. அவனை நான் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/144&oldid=686996" இலிருந்து மீள்விக்கப்பட்டது