பக்கம்:விசிறி வாழை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினைந்து

‘பாரதி பரீட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் கணக்கில் நீ அவ்வளவு வீக் இல்லை. ஆகையால் இன்றுமுதல் உனக்கு ஸயன்ஸ் பாடம் சொல்லித் தரப் போகிறேன். எங்கே, ஸ்யன்ஸ் புஸ்தகம் கொண்டு வந்திருக்கிருயா? அதிலிருந்து சில கேள்விகள் கேட்கப் போகி றேன்’ என்றாள் பார்வதி.

லயன்ஸ் என்றதுமே பாரதியின் வயிற்றில் பகீர்’ என்றது. கணக்குக்கு அடுத்தபடியாக அவளுக்குப் பிடிக்காத ‘சப்ஜெக்ட்’ அதுதான். அன்று பாரதி ராஜாவுடன் சினிமா வுக்குப் போகத் திட்டம் போட்டு வைத்திருந்தாள். அந்த நேரத்திலா ஸயன்ஸ் பாடம் படிக்கத் தோன்றும்? படு போர் ஆயிற்றே!

காலையிலிருந்தே எனக்குத் தலைவலி தாங்கவில்லை அம்மா! அத்துடன் இன்று நான் ஸயன்ஸ் புத்தகமும் கொண்டுவர மறந்து போனேன்’’ என்றாள் பாரதி.

  • மாத்திரை கொடுக்கிறேன் அதைச் சாப்பிட்டுவிட்டு இப்படிக் கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டிரு. ராஜா வந்ததும் உன்னைக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவரச் சொல்கிறேன்......” - -
  • கல்லூரியிலிருந்து புறப்படும்போதே சொல்வதற் கென்ன? உன்னை அப்போதே வீட்டில் கொண்டுபோய் விட்டிருப்பேனே’’ என்றாள் பார்வதி. *

“அப்போது ராஜாவைச் சந்திக்க முடியாதே’ என்று பாரதி கூறவில்லை. எண்ணிக்கொண்டாள். • -

ஸயன்ஸ் புத்தகம் கொண்டு வராததற்காகத் தன்னை பிரின்ஸிபால் கோபிப்பாள் என எதிர்பார்த்த பாரதிக்கு பார்வதியின் உபசரணைகளும், அன்பு:மொழிகளும் வியப்பை அளித்தன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/148&oldid=687001" இலிருந்து மீள்விக்கப்பட்டது