பக்கம்:விசிறி வாழை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினேந்து 145

சேதுபதி பம்பாயிலிருந்து எப்போது திரும்பி வருவார் என்பதை அறிந்து கொள்ளவே பார்வதி அவ்வாறு அன்பு பாராட்டினள். ஆனாலும் பாரதியிடம் அதைக் கேட்டுவிடும் துணிவு அவளுக்கு ஏற்படவில்லே. சகஜமாகக் கேட்பதுபோல் கேட்டுப் பார்க்கலாமா? ஊஹ9ம் கூடாது.

அப்பா, நீங்கள் எப்போது வருவீர்கள் என்று பிரின்ஸி பால் விசாரித்தார்’ என்று பாரதி தன் தந்தையிடம் கூறிஞல் அவர் என்ன எண்ணிக் கொள்வார்? அவர் வருகை யில் நான் அக்கறை கொண்டிருப்பதாக அல்லவா நினைப் பார். போய் வருகிறேன்’ என்று ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போகாதவரைப்பற்றி நான் ஏன் விசாரிக்க வேண் டும்? அவரிடம் எனக்கு அக்கறை இருப்பதாக ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்? ஆலுைம் அவளால் சேதுபதியைப் பற்றி எண்ணுமல் இருக்க முடியவில்லை.

வெகு நேரம் தனக்குத்தானே குழம்பிக் கொண்டிருந்த பார்வதி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாள். பாரதியை மெதுவாக விசாரிக்கத் தொடங்கிள்ை.

‘பாரதி உனக்கு அடிக்கடி தலைவலி வருவது உண்டா?’’

  • இல்லை அம்மா!’ கொஞ்ச நாட்களாகத்தான்... இப்படி...”

எயாராவது டாக்டரிடம் சிகிச்சை செய்து கொள்வது தானே? ஆமாம்...உன்னுடைய அப்பாகூட ஊரில் இல்லை போலிருக்கிறதே எப்போது வருகிறார்?... நான் வேண்டு மாளுல் டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போகட்டுமா?’’ என்று பேச்சுக்கிடையில் தான் கேட்கவேண்டிய கேள்வியை வெகு சாமர்த்தியமாகத் திணித்துவிட்டாள் பார்வதி.

“ஞாயிற்றுக்கிழமை மாக்ல வருகிறார். இப்போது எனக்கு முன்னளவு தலைவலி இல்லை. வீட்டுக்குப் போய்ச் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டால் சரியாகிவிடும்’ என்றாள் பாரதி.

எரோஜா வரட்டும்; உன்னைக் காரில் கொண்டு விடச் சொல்லுகிறேன்’ என்று பார்வதி சொல்லி வாய் மூடவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/149&oldid=687002" இலிருந்து மீள்விக்கப்பட்டது