பக்கம்:விசிறி வாழை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஒன்று 11

கள். நீ போய் அவற்றை யெல்லாம் அழகாகக் கட்டிவிடு. பாரதியும் ரிஹர்ஸலிலிருந்து வருகிற நேரமாயிற்று’ என் ருள் பார்வதி.

ராஜாவின் இதயம் உற்சாகத்தில் சீட்டியடித்தது. அடுத்த கணமே அவன் புதிய ஹாஸ்டல் கட்டடத்தில் இருந் தான். ஹாலுக்குள் நுழையும்போதே அந்த வாயாடிப் பெண்களுக்கு முன்னுல் சங்கோசமின்றிப் பழகவேண்டும் என்று தானகவே எண்ணிக்கொண்டு, செயற்கையான அதட்டல் குரலில் மெள்ளப் பேசவேண்டிய விஷயத்தைக் கூட இரைந்து கத்தின்ை.

‘எங்கே தோரணமெல்லாம்?......... எலெக்ட்ரீஷியன் வந்தாச்சா? ஆணி இல்லையா? சுத்தியல்...!”...இப்படிப் பொதுவாக அதட்டல் போட்டுக் கொண்டே சுற்று முற்றும் யாராவது தன்னக் கவனிக்கிறார்களா என்று ஒரு முறை கடைக்கண்ணுல் கவனித்துக் கொண்டான். அங்கே யாருமே இல்லை: ஒரு மூலேயில் குவிந்து கிடந்த காகிதத்தோரணங் களேயும், இன்னொரு பக்கம் குத்திட்டு அடுக்கி வைக்கப்பட் டிருந்த மடக்கு நாற்காலிகளையும் தவிர......

ராஜா அந்த நாற்காலிகளில் ஒன்றை நடு ஹாலில் இழுத்துப் போட்டுக்கொண்டு, செட்டில்’ நட்சத்திரங்களின் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு சினிமா டைரக்டரைப் போல் உட்கார்ந்துகொண்டான். அப்படி ஒரு நினைப்பு அவனுக்கு!

அடுத்த நிமிடம் கூடை முறம் கட்டுவோம், குறி சொல்லுவோம்’ என்று ஊமை ராகத்தில் பாடியபடியே மறு நாள் ஆடப் போகும் குறத்தி நடனத்தை ஒத்திகை பார்த்துக் கொண்டவளாய்த் தன் தோழிகளுடன் ஹாலுக் குள் குதித்து வந்தாள் பாரதி. அங்கே நாற்காலியில் உட் கார்ந்து கொண்டிருந்த ராஜாவைக் கண்டதும் அவள் முகம் வெட்கத்தால் சிவந்து போயிற்று !

“ஹல்லோ! எஸ் பாரதி, பி.எஸ்ஸி, ஸெகண்ட் இயர், சாரதாமணி காலேஜ். டான்ஸ் ரொம்ப பிரமாதம்! கூடை முறம் அப்புறம் கட்டிக் கொள்ளலாம். இப்போது இந்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/15&oldid=687003" இலிருந்து மீள்விக்கப்பட்டது