பக்கம்:விசிறி வாழை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதினேந்து 147

சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி. அந்தக் குருவி முதன்முதல் தனியாக அங்கு வந்து கூடு கட்டிக் குடியேறியபோது பார்வதி அதைக் கவனித்திருக் கிருள். இப்போது சில நாட்களாக அது வேறொரு குருவியுடன் ‘சிநேகம் பூண்டு சுற்றிக் கொண்டிருப்பதையும் கவனித்திருக் கிருள். இன்று அந்த ஆண் குருவியைக் காணுமல், பெண் சிட்டுக்கு ஆண் சிட்டு எங்கே போயிற்றே! எப்போது போயிற்றே! பெண் சிட்டிடம் சொல்லிக்கொண்டு போயிற்றே! சொல்லிக் கொள்ளாமலேயே போய், அஆலய வைத்துக் கொண்டிருக்கிறதோ? பார்வதிக்கு அந்தக் குருவி யின் நிலே மிகுந்த வேதனையைத் தந்தது. பார்வதிக்கு மீண்டும் சேதுபதியின் நினைவு தோன்றவே அதை மறக்க விரும்பினுள். -

மீனுவின் தந்தை தனக்கு எழுதிய கடிதமும் அவருக்குத் தான் எழுதிப்போட்ட பதில் கடிதமும் ஞாபகத்துக்கு வந்தது.

நேராக மாடி அறைக்குச் சென்றாள். போகும்போது அந்த விசிறி வாழை அவளைப் பார்த்துச் சலசலப்பதுபோல் தோன்றியது. கீழே கிளேத்திருந்த முதிர்ந்த இலே ஒன்று மெளனமாக அவளே விசாரிப்பது போலவும் தோன்றியது. சே! இதெல்லாம் வீண் பிரமை!’ என்று எண்ணிக்கொண்ட வளாய், படிகளைக் கடந்து அறைக்குள் பிரவேசித்தாள். மேஜை டிராயரைத் திறந்து மீனவின் தந்தைக்குத் தான் எழுதிய கடிதத்தின் பிரதியை எடுத்துப் படித்தாள்...

‘ஐயா, தங்கள் கடிதம் கிடைத்தது. மீன மிக நல்ல பெண். படிப்பிலும், விளையாட்டிலும் முதன்மையாக இருந்து இந்தக் கல்லூரிக்கே நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கிருள்..... தாங்கள் எழுதியுள்ளபடி வேறொரு கல்லூரி மாணவனுடன் அவள் நட்பு பூண்டிருக்கிருள் என்பது உண்மைதான். ஆளுல் அந்த நட்பில் குற்றம் எதுவும் இல்லே. மீனுவைத் தனியில் அழைத்து விசாரித்தேன். அவள் எதையும் மறைக் காமல், என்னிடம் உண்மையைக் கூறிவிட்டாள். கார் னேஷன் கல்லூரி மாணவனுகிய கோபாலன் என்பவனே டென்னிஸ் விளையாட்டின்போது அடிக்கடி சந்தித்திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/151&oldid=687005" இலிருந்து மீள்விக்கப்பட்டது